லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை.. இடையே நிலம் வாங்க விற்க கட்டுப்பாடு.. பாஜக முதல்வர் பரபரப்பு..!

இனிமே இங்க இப்படித்தான் என்று உரக்கச் சொல்லியிருக்கக் கூடிய வகையில் லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை, இந்து முஸ்லிம் இடையே நிலம் வாங்க விற்க கட்டுப்பாடுகளை விதித்து இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தப் பரபரப்பானது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் தான் நடந்தேறி உள்ளது.அட.. என்ன நடக்கிறது என்று கேட்கக் கூடிய வகையில் தற்போது நகர்த்தப்படும் நகர்வுகள் ஒவ்வொன்றும் அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்திய மக்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

லவ் ஜிகாத்துக்கு ஆயுள் தண்டனை..

ஏற்கனவே அசாமில் மண்ணின் மைந்தர்களுக்கே அரசு வேலை என்று புதிதோர் சட்டத்தைக் கொண்டு வர அந்த மாநில அரசு அதிரடியாக முடிவெடுத்து உள்ள நிலையில் அங்கு பிறந்து வளர்ந்த அசாமியர்களுக்கு மட்டும் தான் அரசு வேலை வாய்ப்பு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டது.

இந்நிலையில் நம் தமிழகத்தில் வடக்கன்ஸின் ஆதிக்கம் அதிகரித்து எல்லா துறைகளிலும் அவர்கள் அமர்ந்து இங்கே ஆட்சியை கூட கைப்பற்றி விடுவார்களோ? என்று சிந்திக்க கூடிய வகையில் நடைமுறையில் அத்துணை தொழில்துறைகளிலும் வடக்கன்ஸ் ஆதிக்க ஏற்பட்டு இருப்பதாக புகார்கள் வந்துள்ளது.

 

இதனை அடுத்து தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் இதே தொல்லை இருப்பதால் மண்ணின் மைந்தர்களுக்கே அரசு வேலை என்று ஆயுதத்தை கையில் எடுக்கக்கூடிய சூழலில் ஒவ்வொரு அரசும் உள்ளது.

 

இந்நிலையில் தான் இது போன்ற விஷயத்தை உடனடியாக செயல்படுத்த புதிய சட்டத்தை அசாம் மாநில அரசு கொண்டு வர உள்ளது. இது குறித்து அந்த மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா ஷர்மா சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அந்த வகையில் மியா என்று அழைக்கப்படும் வங்க மொழி பேசும் வங்கதேச முஸ்லிம்களை பழங்குடியினராக அங்கீகரிக்க சில நிபந்தனைகளை விதித்துள்ளதோடு சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அசாமின் பழங்குடியை மக்களின் நலன்களை பாதுகாக்க பாஜக செயல்படும் என்று சொல்லிவிட்டார்.

மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டங்கள் கொண்டுவரப்படும். அப்படி இது போன்ற வழக்குகளில் சிக்குபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக முதல்வர் கூறிய விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது

இந்து முஸ்லிம் இடையே நிலம் வாங்க விற்க கட்டுப்பாடு..

அதுமட்டுமல்லாமல் இந்த லவ் ஜிகாத் விவாகரங்களில் அதிகபட்ச ஆயுள் தண்டனையும், 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்நிலையில் ஒரு பெண் அல்லது மைனர் பெண்ணை அச்சுறுத்தி ஏமாற்றி திருமணம் செய்து கொள்வது தான் லஜ் ஜிகாத்.

 

மேலும் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே நிலம் விற்பனை செய்வது தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறிய நிலையில் அத்தகைய பரிவர்த்தனையை அரசால் தடுக்க முடியாது என்றாலும் சில ஒப்புதல்கள் தேவை என்று கட்டுப்பாட்டுகளை விதித்துள்ளது.

அசாம் பாஜக முதல்வர் பரபரப்பு..

அசாம் முதல்வர் மேற்கூறிய இந்த பரபரப்பான விஷயங்களை உறுதியாக செயல்படுத்த இருக்கக்கூடிய விஷயம் இன்று இந்தியா முழுவதுமே பேசும் பொருளாக மாறி உள்ளது.

அதிரடியான இந்தக் திட்டத்தின் மூலம் நன்மைகள் ஏற்படுமா? அல்லது இதன் விளைவு விபரீதமாக இருக்குமா? என்பது வரும் கால கட்டங்களில் தான் தெரிய வரும். எனவே அதுவரை பொதுமக்கள் நாம் காத்திருந்து தான் இருக்க வேண்டும்.

இதனை அடுத்து இந்த விஷயம் குறித்து இணையங்கள் பல்வேறு தகவல்களை தருவதோடு மட்டுமல்லாமல் இது நிமித்தமான செய்திகளை வேகமாக பரப்பி மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …