சென்னை மாநகராட்சி வீதிகளில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் தினம் தோறும் பயணப்பட்டு வருகிற வேளையில் தற்போது சென்னை மாநகராட்சி வாகனங்களுக்கு இதை கட்டாயமாக்கி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவின் மூலம் இனி ஒவ்வொரு வாகனத்திலும் இந்த கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதனால் நன்மை ஏற்படுமா? இதன் மூலம் ஓட்டுநர்களின் மீது எழுப்பப்படும் புகார்கள் குறையுமா? என்பது இனி வரும் நாட்களில் எளிதில் தெரிந்துவிடும்.
சென்னை வாகனங்களில்..
சென்னை நகரை பொறுத்த வரை மக்கள் தொகைக்கு பஞ்சமில்லாத படி மக்கள் நெருக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த பெருநகர் மாநகராட்சியில் குப்பை சேகரிக்க கூடிய பணிகளை 5 மண்டலங்களில் மாநகராட்சியும், 10 மண்டலங்களில் தனியார் நிறுவனமும் செய்து வருவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.
இந்த குப்பைகளை சேகரிக்கும் வண்டிகள் மொத்தம் 2287 உள்ளது. மேலும் இந்த குப்பை சேமிப்பில் ஈடுபட்டுள்ள வாகனங்களைத் தவிர வேறு பிற தேவைகளுக்காக சில வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆக மொத்தத்தில் மொத்தமாக 286 வாகனங்கள் உள்ளது.
இதில் லாரிகள், பேட்டரி வாகனங்கள் பொக்லின்கள், மாடு மற்றும் நாய்களை பிடிக்கும் வாகனங்கள் என்று வகை வகையாக உள்ளதால் இந்த வாகனங்களை ஓட்ட சுமார் 400 ஓட்டுநர்கள் நிரந்தர பணியிலும் சிலர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.
இது கட்டாயம்..
இந்நிலையில் அதிகாரிகளின் வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்கள் களத்தில் பணி செய்யவில்லை என தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அது மட்டுமல்லாமல் மாநகராட்சியில் பணியாற்றும் ஓட்டுநர்களின் சிலர் பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு சொந்த வேலைக்காக வெளியே சென்று விடுவதாகவும் இதனால் குப்பை லாரிகள் இயங்காமல் அப்படியே முடங்கி விடுவதாக சொல்லி இருக்கிறார்கள்.
மேலும் கழிவுகள் சூழ்ந்த பகுதிகளில் தூர்வாரப்பட வேண்டிய கழிவுகள் அப்படியே இருப்பதாகவும் இதனால் மனித கழிவுகள், நாய் பிடிக்கும் பணிகளில் கால தாமதம் ஏற்பட்டு உள்ளதாக தொடர்ந்து புகார்கள் மாநகராட்சிக்கு வந்த வண்ணம் இருந்தது.
அடுத்து இந்த புகார்களை விசாரிக்க சென்னை மாநகராட்சியின் கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டு இருக்கிறார். இந்த உத்தரவில் மாநகராட்சி வாகனங்களை இயக்கி கண்காணிக்க அனைத்து வாகனங்களிலும் கண்டிப்பாக ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என்ற அதிரடி உத்தரவை ஈட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாநகராட்சிக்கு பறந்த உத்தரவு..
இந்த உத்தரவை அடுத்து மண்டல அலுவலர்களும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவுக்கு ஏற்ப குப்பை லாரிகள் பொக்லையின் வாகனம் என அனைத்து விதமான வாகனங்களிலும் ஜி.பி.எஸ் கருவி கட்டாயம் பொருத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடந்து வருவதாக தெரிகிறது.
இந்தப் பணி முற்றிலும் நடந்து முடிந்துவிட்டால் இனி யாரும் ஓபி அடித்துக் கொண்டு ஆபீஸ் நேரத்தில் வெளியே செல்ல முடியாது. மேலும் இது போன்று வரும் புகார்களுக்கும் உடனடியாக பதிலை அளிக்க முடியும் என நம்பலாம்.
இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி மாநகராட்சி ஆணையரின் உத்தரவை அனைவரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.