மனதில் நிம்மதி இல்லாமல் இரவில் தூக்கம் வராமல் பலரும் இன்று பரிதவித்து வருகிறார்கள். இவர்களின் தூக்கமின்மைக்கு காரணம் என்ன என்று நாம் தேடி அலைவதை விட எப்படி நிம்மதியாக தூங்குவது என்று சிந்திப்பதே மிகச் சிறப்பாக இருக்கும்.
அந்த வகையில் நீங்கள் நிம்மதியாக இரவில் தூங்க வேண்டும் என்றால் ஆன்மீக ரீதியாக கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்களை செய்தால் நிச்சயமாக மன மகிழ்ச்சியோடும் நிம்மதியாகவும் நீங்கள் உறங்கலாம்.
இரவில் தூக்கம் இன்றி தவிக்கிறீர்களா?..
இன்று குடும்பங்களில் அதிகரித்து இருக்கும் நெருக்கடிகள் மட்டுமல்லாமல் தேவையில்லாத சிந்தனையின் காரணமாக இரவு தூக்கத்தை இழந்து பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் தூக்கம் வருவதற்கு என்று மாத்திரைகளை நாடி வரக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது..
ஒவ்வொரு மனிதரும் சராசரியாக தினமும் 6 முதல் 8 மணி நேரம் உறங்க வேண்டும் இது அவர்களது ஆரோக்கியத்துக்கு உதவும். அதை விடுத்து கண்ட நேரத்தில் உறங்குவது, உறங்க வேண்டிய நேரத்தில் உறங்காமல் இருப்பது போன்றவை ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்தும்.
சிலருக்கு எப்போதுமே தூக்கம் வராமல் தவிக்க பல்வேறு வகையான காரணங்கள் சொல்லப்படுகிறது. எனினும் அப்படி தூக்கம் வராத சூழ்நிலையில் பல்வேறு நோய்களின் தாக்கத்திற்கு உள்ளாக கூடியவர்கள் தூக்கம் வருவதற்கு எளிமையான வழிகள் என்னென்ன என்பதை அறிந்து கொண்டால் இரவில் நிம்மதியாக தூங்க முடியும்.
நிம்மதியான தூக்கம் வேண்டுமா?..
அப்படி நீங்கள் இரவில் நிம்மதியாக தூங்க சில ஆன்மீக வழிமுறைகளை கடைப்பிடித்தால் மட்டும் தான் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும். அதற்காக நீங்கள் அதிகாலையில் எழுவது மூலம் தான் நாள் முழுவதும் மகிழ்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும்.
எனவே இரவில் நீங்கள் மன நிம்மதியோடு ஒரு ஆழ்ந்த உறக்கத்தை தூங்க தியானம் செய்வதை கட்டாய பயிற்சியாக மேற்கொள்ள வேண்டும்.
ஆன்மீகம் காட்டும் எளிய வழி..
அப்படி நீங்கள் தியானம் செய்வதன் மூலம் உங்களது கவனம் ஒரு முகமாக்கப்பட்ட கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்கும். இது உடலையும், மனதையும் ஒன்றாக செயல் பட வைப்பதால் மன அழுத்தம் நீங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
புத்தகம் படிப்பது என்பது இன்று இல்லாமல் போய்விட்டது. தூங்க செல்வதற்கு முன்பு ஆன்மீகம் தொடர்பான புத்தகங்களை வாசிப்பதன் மூலம் உங்கள் கனவுகள் லட்சியங்கள் போன்றவை நல்ல முறையில் ஈடேற வழி வகுக்கும்.
இதன் மூலம் உங்கள் எண்ணங்கள், கற்பனைகள், கவலைகள் அனைத்தும் மடை மாறி வேறு உலகத்திற்கு நீங்கள் செல்லுவீர்கள். மேலும் மன அமைதி ஆவதின் மூலம் உங்களுக்கு கட்டாயம் ஆழ்ந்த தூக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பினை புத்தகம் வாசித்தல் மூலம் பெறலாம்.
தெய்வீக சக்தி கொண்ட மந்திரங்களை இரவு உறங்குவதற்கு முன்பு உச்சரிப்பதின் மூலம் உங்கள் உள் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை ஆற்றலை நீங்கள் பெறலாம்.
எப்படி இரவு உறங்குவதற்கு முன்பு நீங்கள் இதை செய்வதால் உங்களுக்கு மனதில் அமைதி உணர்வு ஏற்பட்டு நிம்மதியான உறக்கம் கிடைக்கும்.
இரவு உணவை முடித்த பிறகு அரை மணி நேரம் இடைவெளியை விட்டு ஒரு அரை மணி நேரம் நடை பயணம், யோகா போன்றவற்றை செய்வதின் மூலம் இரவில் நல்ல தூக்கத்தை அடைய முடியும்.
மேலும் தசைகளை நீட்டியும், தளர்வையும் தரக்கூடிய யோகாக்களை செய்வதின் மூலம் நீங்கள் சுறுசுறுப்பாக காலையில் எழுந்து வேலை செய்ய இது உதவி செய்யும்.