கொழுக் மொழுக் நடிகையாக பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் ஹன்சிகா மோத்வானி.
மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்த இவர் தான் சிறுவயதாக இருக்கும் போதே ஹிந்தி திரைப்படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வந்தார் .
குழந்தை நட்சத்திரமாக ஹன்சிகா:
அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் “தேசமுதுரு” என்ற திரைப்படத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு நடித்து சிறந்த நடிகையாக அறிமுகமாகி இருந்தார்.
அந்த திரைப்படத்தில் ஃபிலிம் பேர் விருது பெற்று கௌரவிக்கப்பட்டார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் , இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி 2011 ஆம் ஆண்டு வேலாயுதம் திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் நல்ல அறிமுகத்தை அவருக்கு கொடுத்ததை தொடர்ந்து மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, வேட்டை , சிங்கம் 2 , தீயா வேலை செய்யணும் குமாரு, மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொடர் வெற்றி திரைப்படங்கள்:
மேலும், அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், வாலு , அரண்மனை 2, இஞ்சி இடுப்பழகி, போக்கிரி, இப்படி பல வெற்றி திரைப்படங்களில் நடித்து மிகக்குறுகிய காலத்திலேயே பிரபலமான நடிகையாக பேசப்பட்டார் ஹன்சிகா.
தொடர்ந்து தனது மார்கெட்டடி உச்ச இடத்தில் நிலை நிறுத்திக் கொண்ட ஹன்சிகாவுக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக கிடைத்துக் கொண்டே இருந்தது.
இதனிடையே “வாலு” திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த ஹன்சிகா அவருடன் நடிக்கும் போது காதல் கிசுகிசுக்கப்பட்டார் .
இவர்கள் இருவரும் காதலிப்பதாக பொதுவெளியில் வெளிப்படையாக கூட சிம்பு தெரிவித்து இருந்தார். ஆனால், சிம்புவின் போக்கே சரியில்லை.
தோழியின் கணவரை ஆட்டயப்போட்ட ஹன்சிகா:
அவர் பல நடிகைகளுடன் இப்படித்தான் பழகி வருகிறார் என ஹன்சிகாவின் தோழிகள் அவரிடம் கூற ஹன்சிகா சிம்புவை பிரிந்து விட்டார்.
அதை அடுத்து தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்த அவர்கடந்த 2002 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும், காதலரும், தொழிலதிபரமான சொஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் ஹன்சிகா தோழியின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிட்டுதக்கது. இவர்களது திருமணம் மிகவும் சர்ச்சைக்கு உள்ளான திருமணமாக பார்க்கப்பட்டது.
ஆரஞ்சு உடையில் ஆள மயக்கும் கவர்ச்சி:
அதாவது தோழியின் கணவரை ஆட்டைய போட்டு திருமணம் செய்து கொண்டார் ஹன்சிகா என அவரை விமர்சித்து தள்ளினார்கள்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வத்தை செலுத்தும் ஹன்சிகா எப்போதும் தனது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.
அந்த வகையில் தற்போது ஆரஞ்சு நிறத்தில் கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தனது ஸ்ட்ரக்சர் அழகை காட்டி போஸ் கொடுத்து எல்லோரையும் கவர்ந்திழுத்து விட்டார்.
இதை பார்த்து ரசிகர்கள் இதைத்தான்… இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம் என அழகில் மயங்கி லைக்ஸ் குவித்துள்ளனர்.