கிளாமருக்கு நோ சொன்ன சாய்பல்லவியா இது..? இது போதும் ரெண்டு வாரத்துக்கு தாங்கும்..!

பிரேமம் திரைப்படம் மூலமாக தென்னிந்திய முழுவதுமே பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. பொதுவாக நடிகைகள் அவர்களது நடிப்பின் மூலமாகதான் அதிகமாக பிரபலம் அடைவார்கள். ஆனால் சாய் பல்லவியை பொறுத்தவரை அவரது நடன கலை மூலமாக பிரபலமடைந்தவர்

சாய் பல்லவி சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நடனத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் நடன பயிற்சி பள்ளிகளுக்கு சென்று நிறைய நடனம் ஆடுவதற்கு கற்றுக் கொண்டிருந்தார். அதனாலேயே சிறப்பாக நடனம் ஆடக்கூடியவராக சாய் பல்லவி இருந்தார்.

சாய் பல்லவி வாய்ப்பு:

பொதுவாக தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை அதில் நடிக்கும் நடிகர்கள் அதிக கவர்ச்சியாக நடிக்க வேண்டிய சூழல் இருக்கும். பெரும்பாலும் இங்கிருந்து அங்கு செல்லும் நடிகைகள் கூட கவர்ச்சியாக நடித்து விடுவார்கள்.

ஆனால் சாய் பல்லவியை பொருத்தவரை தெலுங்கு சினிமாவில் கூட பெரிதாக கவர்ச்சியாக நடித்ததில்லை. அதற்கு அவரது நடன திறமையே காரணம் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் பாடல்களில் நடனத்தின் மூலமாகவே ரசிகர்களை மயக்கிவிட கூடியவர் சாய் பல்லவி.

அதனால் அவர் கவர்ச்சியாக நடிப்பதற்கு தேவையே இருக்காது. இதனால் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சியாக நடிக்காமலேயே அவருக்கென்று ஒரு ரசிக்கப்பட்டாளத்தை வைத்துள்ளார் சாய் பல்லவி.

தமிழில் பிரபலம்:

பொதுவாக சாய்ப்பல்லவி கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பார் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்றால் அந்த படத்தில் அவர் நடிக்க மாட்டார். பிரேமம் திரைப்படத்திற்கு பிறகு தமிழில் அவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே முக்கியமான கதைகளங்களை கொண்ட படங்களாக இருந்தன.

மாரி 2 திரைப்படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் வெகுவாக பேசப்பட்ட திரைப்படமாக கார்கி திரைப்படம் இருந்தது. கார்கி திரைப்படம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்துதான் தற்சமயம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் சாய் பல்லவி இதனாலேயே அமரன் திரைப்படத்திற்கு ஒரு எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது.

ஆரம்பம் முதலே சினிமாவிற்கு வந்ததிலிருந்து சாய் பல்லவி பெரிதாக கவர்ச்சியாக நடித்தது கிடையாது. மாடர்ன் உடைகளில் நடித்தாலும் கூட டீசண்டான உடைகளை மட்டுமே அணிந்து நடித்து வந்தார் சாய் பல்லவி. இந்த நிலையில் சமீபத்தில் அவரது வீடியோ ஒன்று அதிக வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் டைட்டான கவர்ச்சி உடையை அணிந்து நடனமாடியிருக்கிறார் சாய்பல்லவி. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறிய சாய் பல்லவியா இது என்று கூறி வருகின்றனர். மறுபக்கம் சாய்பல்லவி நடனத்திற்கு ஆதரவான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam