தமிழ் சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளர்களில் யுவன் சங்கர் ராஜாவிற்கு எப்பொழுதுமே தனிப்பட்ட இடம் இருக்கும். தன்னுடைய 16 வது வயதிலேயே தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் சங்கர் ராஜா.
முதல் திரைப்படத்திலேயே அவை இசையமைத்த அனைத்து பாடல்களுமே வெற்றி பாடலாக கொடுத்து தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு இசையமைப்பாளர் என்று யுவன் சங்கர் ராஜாவை கூறலாம். அப்படிப்பட்ட யுவன் சங்கர் ராஜா இப்பொழுது அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.
தொடர்ந்து காம்போ:
பொதுவாக வெங்கட் பிரபு இயக்கும் அனைத்து திரைப்படங்களிலும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைப்பாளராக இருப்பார். யுவன் சங்கர் ராஜா வெங்கட் பிரபு இயக்கிய முதல் திரைப்படமான சென்னை 28 திரைப்படத்தில் துவங்கி இப்பொழுது இயக்கிவரும் கோட் திரைப்படம் வரைக்கும் அனைத்திலும் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைத்து வருகிறார்.
பெரும்பாலும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் பாடல்கள் வெற்றியைதான் கொடுத்து வந்திருக்கின்றன. முக்கியமாக அஜித் திரைப்படங்களுக்கு எல்லாம் நிறைய வெற்றி பாடல்களை யுவன் சங்கர் ராஜா கொடுத்திருக்கிறார்.
ஆனால் தற்சமயம் விஜய் படமான கோட் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதற்கு முன்பு விஜய் நடித்த புதிய கீதை திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.
எதிர்மறை விமர்சனங்கள்:
அதற்குப் பிறகு விஜய்யின் எந்த திரைப்படத்திலும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவில்லை. வெகு வருடங்கள் கழித்து கோட் திரைப்படத்தில் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த பாடல்கள் தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.
முதல் பாடலான விசில் போடு பாடலே அதிக எதிர்மறையான விமர்சனத்தை பெற்றது. இந்த நிலையில் தற்சமயம் வந்திருக்கும் மூன்றாவது பாடலும் மக்களுக்கு திருப்தியாக இல்லை. இதுகுறித்து சமீபத்தில் பேசிய பத்திரிகையாளர் அந்தணன் கூறும் பொழுது யுவன் சங்கர் ராஜாவை பொருத்தவரை அவர் நல்லவிதமாக இசையமைக்க கூடிய இசையமைப்பாளர்தான்.
ஆனால் நடிகர்கள் அவரது இசையில் ஏதாவது குறைகள் இருப்பதாக கூறி மாற்றி விடுகிறார்கள். ஏனெனில் யுவன் சங்கர் ராஜாவின் நண்பர் ஒருவரிடம் நான் இது குறித்து கேட்ட பொழுது அவர் சில விஷயங்களை கூறியிருந்தார் அவர் கூறும் பொழுது யுவன் சங்கர் ராஜா கவின் நடித்த ஸ்டார் திரைப்படத்திற்கு நன்றாகதான் இசையமைத்திருந்தார்.
அப்படி இருக்கும்பொழுது கோட் திரைப்படத்திற்கு எப்படி ஒழுங்காக இசையமைக்காமல் போவார். அவருடைய இசையில் அவர் ஒரு பாட்டுக்கு 5 இசைகளை போட்டால் அதில் நடிகர்களும் இயக்குனர்களும்தான் நல்ல இசையை தேர்ந்தெடுக்கிறார்கள். அப்படி அவர்கள் தேர்ந்தெடுக்கும் இசைதான் பாடலாக வெளியில் வருகிறது.
இதில் யுவன் சங்கர் ராஜாவை மட்டும் குறை சொல்ல முடியாது என்கிறார் அவர், எனவே யுவன் சங்கர் ராஜாவிற்கு சுதந்திரம் கொடுக்காததே இந்த பாடல்கள் சரியில்லாததற்கு காரணம் என்கிறார் அந்தணன்,