தமிழ்நாட்டில் வேலூரில் பிறந்து வளர்ந்தவரான இந்துஜா ரவிச்சந்திரன் பொறியியல் படிப்பினை படித்து கொண்டிருந்தபோதே அதனை பாதையில் நிறுத்திவிட்டு குறும்படங்களில் நடிக்கத் தொடங்கினார் .
குறிப்பாக இவருக்கு திரைத்துறையில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்துதால் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து வந்தார்.
இந்துஜா ரவிச்சந்திரன்:
இதனால் தன்னுடைய கல்லூரி படிப்பினை பாதையில் நிறுத்திவிட்டு இந்துஜா தொடர்ந்து திரை துறையில் அறிமுகம் ஆவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
அதன் முதல் படியாக தான் அவர் குறும்படங்களில் நடித்து வந்தார். அது ஓரளவுக்கு ஒர்க் அவுட் ஆகி மக்கள் கவனத்தை ஈர்க்கத் துவங்கியது.
திரைத்துறையில் இருந்து வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. குறிப்பாக அவரின் குறும்படம் ஒன்றை பார்த்து அதில் ஈர்க்கப்பட்ட கார்த்திக் சுப்புராஜ் நடிகை இந்துஜாவுக்கு வாய்ப்பு கொடுக்க முன் வந்தார்.
2017 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் சுடர்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக திரைத்துறையில் நடிகையாக அறிமுகம் ஆகியிருந்தார்.
அந்த திரைப்படத்தில் சிறந்த துணை நடிகைகாண விருதும் இந்துஜாவுக்கு கொடுத்து கவுரவிக்கப்பட்டது.
இந்த திரைப்படத்தில் தான் பிரியா பவானி சங்கர் ஹீரோயின் ஆக அறிமுகமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து அடுத்து இந்த திரைப்படத்தின் மூலம் மக்களை கவர்ந்த அவருக்கு தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.
மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்குரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.
தொடர்ந்து இவர் மகாமுனி, பார்க்கிங், பில்லா பாண்டி, பூமராங் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணீர் விட்டு அழுதாலும்:
இதில் மகாமுனி திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக இந்துஜா நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் திரைப்படத்தில் நடிகையாக தான் எதிர்கொண்ட பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார் இந்துஜா.
€ஆம், சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் செல்வராகவன் குறித்து தன்னுடைய பார்வையை பதிவு செய்திருக்கிறார்.
அவர் கூறியதாவது இயக்குனர் செல்வராகவன் போன்ற ஒரு திறமையான இயக்குனரை நான் பார்த்தது கிடையாது .
பிரபல இயக்குனர்:
ஒரு காட்சியை படமாக்கும் முன்பு அதனை அப்படியே நடித்துக் காட்டுவார் .கண்ணீர் விட்டு அழுவது போன்ற காட்சி என்றால் அவரும் கண்ணீர் விட்டு நடித்துக் காட்டுவார் .
நாங்கள் ஒத்திகை பார்க்கும் பொழுது சரியாக அந்த காட்சி வர வேண்டும் நாம் கண்ணீர் விட்டு அழுதால் கூட விடமாட்டார் .
அந்த காட்சி எந்த அளவுக்கு தத்ரூபமாக வர வேண்டுமோ அந்த அளவுக்கு தத்துருபமாக அவர் கண்முன்பு நாம் கொண்டு வந்து நிறுத்த வேண்டும்.
அப்போதுதான் அந்த காட்சியை படமாக்க Take சொல்வார் என தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.
நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் RT4GM என்ற திரைப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.