அவரைக்காய் துவட்டல்

அவரைக்காய்  மற்றும் அவரை கொட்டையில் அதிக அளவு போலிக் அமிலம் நிறைந்துள்ளதால் இதனை கர்ப்பிணி பெண்கள் அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான போலிக் அமிலம் கிடைப்பதோடு குழந்தையின் வளர்ச்சி மிக நன்றாக இருக்கும். எனவே ஃபோலி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதற்கு பதில்  தினமும் ஒரு கைப்பிடி அளவு அவரை பருப்பையும் அவரைக்காயை உண்பது மிகவும் நல்லது.

அவரைக்காய் மலச்சிக்கலைப் போக்கும் மற்றும் நுரையீரலில் உள்ள கிருமிகளை அழிக்கும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் எலும்பு பிரச்சனையை வரவிடாமல் தடுக்கும் .

அவரைக்காயில் உள்ள சத்துக்கள்:

நார்ச்சத்து

கால்சியம்

பொட்டாசியம்

கொழுப்பு

கனிமச்சத்துக்கள்  வைட்டமின்கள்

இரும்பு சத்து

வைட்டமின் பி 1

 தயாமின்

 தாமிரம்

பாஸ்பரஸ்

மக்னீசியம்

தேவையான பொருட்கள் :

அவரைக்காய்  அரை கிலோ

துவரம் பருப்பு  1 கப்

தேங்காய் துருவல்  1 கப்

பெரிய வெங்காயம்  3

காய்ந்த மிளகாய்  4

கடுகு  1 டீஸ்பன்

கறிவேப்பிலை  1 கொத்து

எண்ணெய்  தேவைக்கேற்ப

உப்பு  தேவைக்கேற்ப

செய்முறை : 

 அவரைக்காய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். துவரம் பருப்பை நன்கு வேக வைத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

 தேங்காய் துருவலை அரைத்து கொள்ளவும். பின்பு அவரைக்காய் போட்டு கிளறி விட்டு வேகவைத்த பருப்பையும், அரைத்த தேங்காய் துருவல் சேர்த்து கிளறி வெந்தவுடன் இறக்கினால் அவரைக்காய் துவட்டல் ரெடி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …