வெங்காயம் இல்லாமல் சமைக்க சூப்பரான ஒரு பொருள்.

வெங்காயம் இல்லாமல் சமைக்கவே முடியாதா? என்று நினைக்கும்  பலரின் ஏக்கத்தை போக்குவதற்காகவே இந்த கட்டுரை. என்னென்ன பொருட்களை பயன்படுத்தினால் வெங்காயத்தைப் பயன்படுத்தி இதுபோன்று சுவை உங்கள் உணவுக்கு கிடைக்கும் என்பதை பார்க்கலாம். 

உலகிலுள்ள மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு உணவுப் பொருள் வெங்காயம். இது அல்லியம் குடும்பத்தைச் சார்ந்தது. இதில் உள்ள சல்பர் கூறுகளால் வெங்காயம் காரத்தன்மை காணப்படுகிறது. 

இதனால் நாம் சமைக்கும் உணவுகளில் காரத்தன்மை  கொடுத்து சுவையை அதிகரிக்கிறது. ஆனால் இன்று வெங்காயத்தின் விலை தங்கத்தின் விலையை விட அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

 இதனால் வெங்காயத்திற்கு மாற்றாக என்ன பயன்படுத்தினால் நமது உணவு சுவை அடையும் என்பதை இப்போது கூறுகிறேன். காய்ந்த வெங்காயம் அல்லது உலர்ந்த வெங்காயம் தற்போது சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகை கடைகளில் கிடைக்கிறது. 

இந்த வெங்காயத்தை பயன்படுத்துவதால் கண் எரிச்சல் மற்றும் நீர் வருவது போன்ற அசௌகரியங்கள் தவிர்க்கப்படும் அதற்கு மாற்றாக உலர் வெங்காயத்தை வாங்கி பயன்படுத்தலாம்.

இந்த உலர் வெங்காயத்திற்கு நல்ல வாசனையும் உண்டு. வெங்காயத்துக்கு மாற்றாக வெங்காயத் தாள்களை பயன்படுத்தலாம். இதனை கிரின் ஆனியன் என்றும் பச்சை வெங்காயம் என்றும் அழைப்பார்கள். 

வழக்கமாக வெங்காயத்தை விட சல்ஃபர் கூறுகள் குறைவாக இதில் இருக்கும். அல்லியம் குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு வகை லிக்ஸ். இதில் அடர்த்தியான வெள்ளை தண்டு மற்றும் தட்டையான இலைகள் இருக்கும் வெங்காயத்திற்கு பதிலாக இதை மாற்றாக நாம் பயன்படுத்தலாம். 

அடுத்து மாற்றுப் பொருளாக நாம் பயன்படுத்துவது சோம்பு இது சிறிது இனிப்புச் சுவையுடன் இருக்கும். சமைத்தபின் வெங்காயம் போன்ற உருவகத்தை கொடுக்கக்கூடிய தன்மை இந்த சோம்பு உள்ளது என்பதால் வெங்காயத்திற்கு மாற்றுப் பொருளாக இந்த சோம்பை நாம் பயன்படுத்தலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …