“உன்னை நினைக்கவே.. நொடிகள் போதுமே..” நடிகை பிரியங்கா இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

சினிமாவை பொருத்தவரை ஒரு காலகட்டங்களில் பிரபலமான நடிகையாகவும், பிரபலமான நடிகர்களாகவும் நட்சத்திர அந்தஸ்தை பிடித்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த பலபேர் காலங்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வரவுகளால் அட்ரஸே தெரியாமல் போய்விடுகிறார்கள் .

இப்படி ஒரு நடிகை இருந்தாரே என பல வருடங்கள் கழித்து யோசிக்கும் அளவுக்கு அவர்களுக்கு மார்க்கெட் இல்லாமல் சினிமா இண்டஸ்ட்ரி பக்கமே இல்லாமல் போய் விடுகிறார்கள் .

நடிகை பிரியங்கா கோதாரி:

அப்படிப்பட்ட நடிகையாக மிகப்பெரிய அளவில் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துக் கொண்டிருந்த நடிகை தான் பிரியங்கா கோதாரி.

கல்கத்தாவை சொந்த ஊராகக் கொண்ட இவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது டெல்லிக்கு குடிப்பெயர்ந்து அங்கு கல்லூரி படிப்பை படித்து முடித்துவிட்டு மாடல் அழகியாக மாறினார்.

பின்னர் பல்வேறு விளம்பர திரைப்படங்களில் இவர் நடித்து வந்ததன் மூலமாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

அதன் மூலம் தான் 2003 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளிவந்த ஜேஜே படத்தில் அறிமுகமானார். பிரியங்கா கோத்தாரி மாடலிங் செய்தபோது அவரது புகைப்படங்களை பார்த்து ஆடிஷனுக்கு. பரிந்துரைக்கப்பட்டு அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜேஜே படம் கொடுத்த அடையாளம்:

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே மிகப்பெரிய அளவில் ரசிகர்களின். ஃபேவரைட் நடிகையாக இடத்தைப் பிடித்தார் .

இந்தப் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் “உன்னை நினைக்கவே நொடிகள் போதுமே” என்ற பாடல் ரசிகர்களால் மறக்க முடியாது.

அனைவரது ஃபேவரைட் லிஸ்டிலும் இடத்தை பிடித்திருக்கிறது. இதன் மூலமே இந்த நடிகை பிரபலமானார் என்று சொல்லலாம் .

அந்த படத்தில் அவ்வளவு க்யூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்து நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். அந்த காலத்தில் இருந்த ராஷ்மிகா மந்தனா என்று இவரை சொல்லலாம்.

அந்த அளவுக்கு அப்படத்தில் இவரது நடிப்பு கவர்ந்து விட்டது. தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

மேலும் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் சில படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

தமிழில் ஜே ஜே படத்தில் ஜமுனா என்ற கேரக்டரில் நடித்து அமோக வரவேற்பை பெற்ற அவருக்கு அதை அடுத்து கச்சேரி ஆரம்பம் படத்தில் “வாடா வாடா” என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

ஜேஜே பட நடிகையின் லேட்டஸ்ட் போட்டோஸ்:

அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் இல்லாததால் இவர் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்விட்டார்.

தற்போது 40 வயதாகும் பிரியங்கா கோதாரி கடந்த 2016 ஆம் ஆண்டு பாஸ்கர் பிரகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் பிரியங்கா கோதரியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை பார்த்து அவரது ரசிகர்கள் ஆள் அடையாளம் தெரியாத அளவுக்கு இவ்வளவு மாறிட்டாங்களே என இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்து வைரல் ஆக்கி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam