எப்போதுமே சினிமா துறை என்பது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத துறையாகதான் இருந்தது. சினிமாவில் இருந்து வரும் நடிகைகள் பலரும் தொடர்ந்து பாலியல் ரீதியாக ஏதாவது ஒரு பிரச்சனையை சந்தித்து வந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
எல்லா நடிகைகளுக்கும் இப்படி நடப்பது கிடையாது என்றாலும் கூட ஒரு சில நடிகைகளுக்கு கண்டிப்பாக இந்த மாதிரியான பிரச்சினைகள் நடக்கின்றன. அப்படி நடக்கும்போது அவர்களும் அதை வெளியில் வந்து கூறுகின்றனர் நடிகைகளுக்கு சினிமாவில் மட்டும்தான் பாதுகாப்பு இல்லையா என்று கேட்டால் பொது சமூகத்திலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தான் கூற வேண்டும்.
எதிர்நீச்சல் நடிகை
இளம் பெண்களில் துவங்கி சிறுமிகள் வரை பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் நடிகை காயத்ரி தனக்கு நடந்த நிகழ்வை ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். நடிகை காயத்ரி எதிர்நீச்சல் சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்த சீரியல் நடிகை ஆவார்.
எதிர்நீச்சல் சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார் என்றாலும் கூட அவர் நடிப்பு அதில் சிறப்பாக இருந்தது. இந்த நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறும்பொழுது நான் கல்லூரி படித்த காலங்களில் என்னிடம் உன் ரேட்டு எவ்வளவு என்று கேட்டிருக்கிறார்கள்.
மோசமான அனுபவம்
அப்பொழுது நான் லாயாலா காலேஜ் படித்து வருகிறேன் என்று அவர்களிடம் கூறினேன். ஆனால் அப்பொழுதும் பரவாயில்லை உன் ரேட் என்னன்னு சொல்லு என்று கேட்டார்கள். அதேபோல சில வேலைகளுக்காக ஒருமுறை ரூம் எடுத்து தங்கி இருந்தோம்.
அப்பொழுது நாங்கள் ரூம் எடுத்து தங்கி இருந்த பகுதிகளில் முழுக்க திருநங்கைகளுக்கு தங்குவதற்காக இடம் ஒதுக்கி இருந்தனர் அதில் அனைவருமே கிளம்பி சென்று விட்டனர். அந்த சமயத்தில் நானும் கிளம்பி கொண்டிருந்தேன்.
எவ்ளோ ரேட்டு
அப்பொழுது குடித்து விட்டு வந்த ஒரு நபர் என்னிடம் ரேட் எவ்வளவு என்று கேட்டுக் கொண்டே இருந்தார். எனக்கு அதனால் பயம் அதிகமாகிவிட்டது ஒரு கட்டத்தில் யாருமே இல்லாத அந்த இடத்தில் அவர் என்னிடம் நெருங்கி வரவும் எனக்கு பயம் அதிகமாகி அங்கிருந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன்.
ஆனால் பயத்தின் காரணமாக அப்போது நான் கத்தி விட்டேன். அந்த சமயம் அங்கு மேக்கப் ஆர்டிஸ்ட்கள் சில பேர் இருந்தார்கள். அவர்கள் வேகமாக வந்து அந்த மனிதரை அனுப்பிவிட்டார்கள் என்று தனக்கு நடந்த நிகழ்வை பகிர்ந்திருக்கிறார் நடிகை காயத்ரி.