தமிழில் ஒரு சில திரைப்படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்தவர் நடிகை சம்யுக்தா சண்முகநாதன். கோயம்புத்தூரை சேர்ந்த சம்யுக்தா சண்முகநாதன் 1985 இல் பிறந்தவராவார். தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது.
அதற்காக தொடர்ந்து முயற்சி செய்து வந்தார். ஆனால் சினிமாவில் கதாநாயகியாக இவருக்கு மிக அதிக வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கவில்லை. இருந்தாலும் தொடர்ந்து இப்பொழுது வரை சினிமாவில் முயற்சித்து வருகிறார் சம்யுக்தா.
சம்யுக்தா சண்முகம்
தமிழில் இவர் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் மூலமாக முதன்முதலாக அறிமுகமானார். அந்த திரைப்படம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆகும். ஆனால் இந்த திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவில்லை.
அதனால் சம்யுக்தாவிற்கும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு முன்பு அவர் சந்திரகுமாரி என்கிற டிவி தொடரில் நடித்து வந்தார். 2018 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடர் ஒரு 100க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து சென்றது.
வேற பொண்ணு கூட அந்த உறவில்
அதன் மூலமாகதான் இவர் கொஞ்சமாக பிரபலமடைந்தார். துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு பிறகு ஆனந்தம் என்கிற வெப்சீரிசில் நடித்தார். பிறகு மை டியர் பூதம், காபி வித் காதல், வாரிசு, மாதிரியான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் சம்யுக்தா சண்முகநாதன்.
இந்த நிலையில் அவரது முதல் திருமணம் எவ்வளவு மோசமாக முடிந்தது என்பது குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியிருக்கிறார். அந்த பேட்டியில் அவர் கூறும்போது எனது கணவர் என்னை விட்டு துபாயில் இருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு துபாயில் வேறொரு பெண்ணுடன் உறவு இருந்தது.
மனம் நொந்த நடிகை:
அவர் என்னை மொத்தமாக விட்டுவிட்டு போய்விட்டார் என்றுதான் கூற வேண்டும். அப்பொழுது எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை வாழ்க்கையில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று தெரியாமல் வருத்தத்தில் இருந்தேன்.
எனது இதயம் மொத்தமாக உடைந்து விட்டது என்றுதான் கூற வேண்டும். இந்த நேரத்தில்தான் நான் அவரை சந்தித்தேன். மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிறகு அவர் நான்தங்கி இருந்த அப்பார்ட்மெண்ட்டில் தங்கி இருந்தார்.
அப்பொழுது என்னிடம் சாதாரணமாக பேசிய போது அவர் உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டார். நான் அப்பொழுது மன வருத்தத்தில் இருந்த காரணத்தினால் அந்த விஷயங்களை எல்லாம் கூறி அழுது கொண்டிருந்தேன். அதனை கேட்ட அவர் எல்லாம் சரியாகிடும் கவலைப்படாதீர்கள் என்று எனக்கு ஆறுதல் கூறினார். எனக்கு அந்த நபரை பெரிதாக தெரியாது என்றாலும் கூட எனக்கு ஆறுதல் கூறினார் என்கிறார் சம்யுக்தா.