பாட்டு தான் டச் விட்டு போச்சு.. ஆனா.. BGM செம்ம flow ல இருக்கு.. தெறிக்க விடும் GOAT ட்ரெய்லர்..!

விஜய் ரசிகர்களின் வெகுநாள் ஆசை நிறைவேறும் வகையில் இன்று கோட் திரைப்படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் முதல் திரைப்படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

அதற்கு முக்கிய காரணம் விஜய் இறுதியாக நடிக்கும் இரண்டு திரைப்படங்களில் கோட் திரைப்படமும் ஒன்று. மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் முதல் திரைப்படம் கோட் என்பதால் இது குறித்து அதிக ஆவல் இருந்து வந்தது.

பாட்டு தான் டச் விட்டு போச்சு

அவற்றை பூர்த்தி செய்யும் வகையில் ஜெயிலர் வெளியாகி உள்ளது என்று கூறலாம். கோட் திரைப்படம் தொடர்பான அப்டேட்டுகள் வெளிவந்த காலம் முதலே நெகடிவான நிறைய விஷயங்கள் பரவி வந்தன. முக்கியமாக படத்தின் பாடல்கள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.

யுவன் சங்கர் ராஜா விஜய்க்கு சரியாக கொடுக்கவில்லை என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன. ஆனால் கோட் டிரைலரை பொறுத்தவரை அவற்றை எல்லாம் தாண்டி ரசிகர்கள் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

BGM செம்ம flow ல இருக்கு

படத்தில் உளவுத்துறை ஏஜெண்டாக விஜய் வருகிறார் என்று தெரிகிறது விஜய்க்கு பிளாஷ் பேக் கதைகளும் இருக்கின்றன. பிளாஸ்பேக் கதையில் ஒரு 30 வயது விஜய் கதாபாத்திரம் வருகிறது. அவரின் மகனாக டீன் ஏஜ் விஜய் வருகிறார்.

இந்த விஜய் கதாபாத்திரத்தைதான் வயதை குறைப்பதற்கு தொழில்நுட்ப விஷயங்களை பயன்படுத்தி அதன் மூலமாக விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார் வெங்கட் பிரபு. ஆனால் இந்த ட்ரைலரிலேயே ஒரு காட்சியில் இளம் விஜய் மிக அழகாக இருக்கிறார்.

தெறிக்க விடும் GOAT ட்ரெய்லர்

இதனை மட்டும் எப்படி சிறப்பாக செய்தார்கள் என்று கேள்விகள் எழுந்து வருகிறது. முக்கியமாக யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை பட்டையை கிளப்பும் விதமாக இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா பி.ஜிஎம்யில் எப்பொழுதுமே கோட்டை விடுவது கிடையாது.

அந்த வகையில் கோட் படத்திலும் சிறப்பான பி.ஜி.எம்மை கொடுத்து இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. படத்தின் இசை படத்தின் பாடல்கள் விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட இந்த பி.ஜி.எம் பலருக்கும் பிடித்திருக்கிறது.

வசனங்களும் கூட சிறப்பாக இருந்தது. சிங்கம் எப்போதுமே சிங்கம் தான் என்னும் அந்த வசனத்திற்கு பிறகு விஜய் ஆரம்பத்தில் இருந்து நடித்தது முதல் இப்பொழுது வரைக்கும் இருக்கும் அவரது கேரக்டர்களை காட்டும் வகையில் ஒரு கார்ட்டூன் காட்சி வருகிறது. அதற்கு மக்கள் மத்தியில் வெகுவான வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்சமயம் இந்த ட்ரெய்லர் யூடியூப்பில் அதிக ட்ரெண்டாகி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam