தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் வைத்து இயக்குனர் வெங்கட் பிரபு கோட் திரைப்படத்தை இயக்கி உள்ளது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
ரசிகர்களின் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கக்கூடிய எந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளி வந்து சமூக வலைத்தளம் எங்கும் பேசும் பொருளாக மாறி உள்ளது. இதற்கு என்ன காரணம் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இதுக்கு தான இந்த டைட்டில்..
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்திருக்கும் கோட் திரைப்படத்தின் முழுமையான பெயர் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்பதைத்தான் ரசிகர்கள் அனைவரும் கோட் என்று சுருக்கமாக அழைத்து வருகிறார்கள்.
மேலும் இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக இருக்கும் இந்த திரைப்படமானது தமிழ் படங்களுக்கு தமிழ் பெயரை வைத்தால் வரி சலுகை உண்டு என தமிழ்நாடு அரசு உருவாக்கி இருக்கும் விதியின் அடிப்படையில் விதி சலுகைகள் பெற தமிழை மட்டுமே பெயராக வைக்க விரும்பினார்கள்.
இதனை அடுத்து இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தமிழில் நடிக்கும் முன்னணி நடிகர்களான விஜய் முதல் ரஜினி வரை தங்களது படத்துக்கு ரசிகர்களை கவரக்கூடிய வகையில் ஆங்கிலத்தில் பெயரை வைப்பதற்கு காரணமே தமிழகத்தில் இருக்கும் தமிழ் பேசும் மக்களே தமிழை மதிக்காமல் நடந்து கொள்வதாக விமர்சனங்கள் பல வந்துள்ளது.
இனி எவனும் வாயை தொறக்க கூடாது..
ஆனால் வெங்கட் பிரபு தனது படத்திற்கு இந்த பெயரை வைக்க ஒரு முக்கியமான காரணம் இருப்பதாக ஹோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளது. இதற்குக் காரணம் இந்த படத்தின் டிரைலர் வெளிவந்திருக்கும் நிலையில் ஒரு சில நிமிடங்களில் விஜய் பற்றி பிரசாந்த் கூறும்போது அவரை சச்சின் கோட் என்று கூறியிருப்பார்.
இப்படி அவர் கூற காரணம் உளவு அமைப்பு நிறுவனத்தில் விஜய் தனது சிறப்பான பணியை வெளிப்படுத்தியதால் தான் அதை குறிப்பாக உணர்த்தி இருப்பார். இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த காரணத்துக்காக தான் படத்திற்கு இந்த பெயரை வைத்தார்களா என்ற ரீதியில் பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் ரசிகர்களின் சந்தேகத்தை தீர்த்து வைக்கக் கூடிய வகையில் இயக்குனர் வெங்கட் பிரபு இந்த படத்திற்கு இந்த பெயர் வைக்க என்ன காரணம் என்பதை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
வெங்கட் பிரபு நச் பதிலடி..
அப்படி அவர் இது போல பெயர் வைக்க காரணம் என்ன என்று கூறும் போது தற்போது ஒரு படத்தின் பெயர் ஒற்றை வார்த்தையாக இருந்தால் ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் நல்ல ரீச் கிடைக்கிறது என்பதை கூறி இருக்கிறார்.
மேலும் இந்த படத்திற்காக நிறைய தமிழ் பெயர்களை யோசித்து யோசித்து எதுவும் புலப்படாத நிலையில் இந்தப் பெயர் மட்டும்தான் படத்திற்கு சூட்டபிளாக இருந்தது. இதனை அடுத்து தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பெயர் வைத்தோம். இனிமேல் இந்த பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம்.
இதனை ஷார்ட்டாக நாங்கள் கோட் என்று படத்திற்கு பெயர் வைத்து அழைத்ததாக வெங்கட் பிரபு கூறிய தகவலை கேட்டு ரசிகர்கள் அனைவரும் வியப்பின் உச்சத்திற்கு சென்றார்கள். இதைத் தொடர்ந்து இதுக்கு தானா? இந்த டைட்டில் இனி எவனும் வாய் திறக்க கூடாது என வெங்கட் பிரபு விஜய் படத்துக்கு வைத்த பெயர் பற்றி ரசிகர்கள் இணையங்களில் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.