22 வயதில் விபரீத முடிவு..! காரணமான முன்னணி இயக்குனர்..!

குறுகிய காலங்களே சினிமாவில் இருந்து வந்தவர் என்றாலும் கூட தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக இருந்தவர் நடிகை ஃபடாஃபட் ஜெயலட்சுமி. 1958 ல் பிறந்த ஜெயலட்சுமி 1980களில் இறந்துவிட்டார்.

இருந்தாலும் இந்த குறுகிய காலகட்டத்திலேயே இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வந்தார் ஜெயலட்சுமி. ஜெயலட்சுமி 1972ல் தெலுங்கு திரைப்படம் மூலமாகதான் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார்.

நடிகை ஜெயலட்சுமி:

அதற்கு பிறகு அவரது தனிப்பட்ட நடிப்பின் காரணமாக அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. ஜெயலட்சுமி வாய்ப்பு கிடைக்கும் எல்லா திரைப்படத்தையும் ஓ.கே சொல்லி நடிக்கக் கூடியவர் கிடையாது. அவருடைய கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடிக்க கூடியவர்.

மேலும் நடிப்பில் ஒரு பெரிய விஷயத்தை காட்ட முடியும் என்கிற திரைப்படங்களில் மட்டும்தான் அவர் நடித்து வந்திருக்கிறார். தமிழிலும் மிக சிறப்பான சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவர் நடித்திருக்கிறார்.

22 வயதில் விபரீத முடிவு

தமிழில் மொத்தம் 30 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஜெயலட்சுமி. முதன்முதலாக அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் மூலமாகதான் தமிழ் சினிமாவிற்கு ஜெயலட்சுமி அறிமுகமானார். அதற்கு பிறகு அவர் நடித்த திரைப்படங்களில் ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் மிக முக்கியமான படங்களாக இருந்தன.

இந்த திரைப்படங்கள் அனைத்திலும் ஜெயலட்சுமியின் நடிப்பு தனிப்பட்டு பேசப்பட்டது. அதனால்தான் குறைந்த திரைப்படங்களாக இருந்தாலும் கூட எல்லா மொழிகளிலுமே பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்  ஜெயலட்சுமி.

தெலுங்கை பொறுத்தவரை தெலுங்கில் 17 திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். தெலுங்கில்தான் அறிமுக நடிகை என்றாலும் கூட தெலுங்கை விட தமிழில்தான் அதிகமான திரைப்படங்களில் ஜெயலட்சுமி நடித்து இருக்கிறார்.

காரணமான முன்னணி இயக்குனர்

ரஜினிகாந்த் சினிமா நடிகராக இருந்த காலகட்டத்திலேயே ஜெயலட்சுமி வளர்ச்சி பெற்ற நடிகையாக இருந்து வந்தார். கவிக்குயில் திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் போது சிவகுமார் பிரபலமான நடிகராக இருந்தார். அதில் கதாநாயகனாக சிவகுமார்தான் நடித்திருப்பார்.

அந்த திரைப்படத்தில் வரும் ஒரு வேலைக்காரன் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். வீட்டு பெண்ணாக அதில் ஜெயலட்சுமி நடித்திருப்பார் ஜெயலட்சுமி பிரபலமானவராக இருந்தார். ரஜினிகாந்தை விடவும் அதிக சம்பளம் வாங்குபவராக இருந்தார்.

இவர் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் சுகுமாரை காதலித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த காதல் தோல்வியடைந்தது. இந்த நிலையில் அவருக்கு இருந்த மன கஷ்டம் காரணமாக தன்னுடைய 22 வயதிலேயே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் ஜெயலட்சுமி.

இருந்தாலும் கூட தமிழ் சினிமாவில் ஒரு மறக்க முடியாத நடிகையாக ஜெயலட்சுமி இருந்து வருகிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam