“ஒன்றியத்தின் தப்பாலே…” – கமல் சரியாக தான் பாடியுள்ளார்..! – பாஜகவினர் பல்டி..!

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற மே 15-ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகநாயகன் கமலஹாசன், நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் பகத் பாசில், நரேன் சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்குத்தப்பாக எதிரி கிடக்கின்றது.

கைதி, மாஸ்டர் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்நிலையில் இந்த படத்தின் சிங்கிள் ட்ராக் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

“பத்தல பத்தல குட்டியும் பத்தல.. புட்டியும் பத்தல மத்தளம் அட்ரா டே..” என்று ஆரம்பிக்கும் இந்த பாடலில் நடுவே “ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே..” என்று நடிகர் கமல்ஹாசன் சில வரிகளை எழுதியுள்ளார்.

இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறும் போக்கு சமீப காலமாக தமிழ்நாட்டில் சில குறிப்பிட்ட கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இப்படி கூறுபவர்கள், பிரிவினைவாதத்தை விரும்பக் கூடியவர்கள் என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நடிகர் கமல்ஹாசன் இப்படி மத்திய அரசு நேரடியாக தாக்குவது போன்ற சில வரிகளை இணைந்திருப்பது குறித்து பாரதிய ஜனதா கட்சியினர் இந்த பாடல் வரிகளை நீக்க வேண்டும் காவல் துறையில் புகார் ஒன்றை கொடுத்திருந்தனர்.

ஆனால் தற்போது கமல்ஹாசன் சரியாகத்தான் எழுதி உள்ளார் என்று பாஜக ஆதரவாளர்கள் பலரும் இணையத்தில் ஒரு கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.

அதன்படி ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே.. என்று கமலஹாசன் பாடியது மிகவும் சரியான ஒன்றுதான். ஏனென்றால், இந்தியாவில் உள்ள அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போட்ட ஒன்றியத்தின் தப்பாலே.. இன்று ஒரு கொரோனா மரணம் கூட இல்லை இப்பாலே.. என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என பாஜக ஆதரவாளர்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் எழுதி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …