எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அஜித்துடன் மட்டும் முடியாது.. No சொன்ன கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதை அடுத்து தென்னிந்திய மொழி படங்களில் ஹீரோயினியாக நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பெற்றிருப்பவர்.

தேசிய விருதை பெற்ற இந்த நடிகையின் நடிப்பை பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. துருதுரு என்று இந்த நடிகை நடித்திருந்தாலும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளின் வரிசையில் தனக்கு என்று ஒரு இடம் பிடிக்க முடியவில்லை.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

தமிழைப் பொறுத்த வரை இவர் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இவர் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

அந்த வகையில் ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் நல்ல பேமஸான நடிகையின் ரகு தாத்தா படமானது தற்போது திரையரங்குகளில் வெளி வந்து கலவை ரீதியான விமர்சனத்தை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வரும் கீர்த்தி சுரேஷுக்கு இந்த படமும் கை கொடுக்காத நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருவதாக விஷயங்கள் இணையங்களில் வேகமாக பரவியது.

மேலும் தமிழில் தற்போது இறங்குமுகமாக இவர் இருந்தாலும் தெலுங்கில் சில படங்கள் ஏறுமுகமாக உள்ளதாலும் ஹிந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி அதற்கு உரிய வேலையில் ஈடுபட்டு வருவதாலும் தான் தமிழில் சரியாக நடிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.

அஜித்துடன் மட்டும் முடியாது..

இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தல அஜித் தனது சொந்த முயற்சியால் இந்த அளவு திரை உலகில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை உருவாக்கி முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறி இருக்கிறார். இவரோடு இணைந்து நடிக்க பல நடிகைகளும் போட்டோ போட்டி போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விடமாட்டோமா? என்று ஏங்கக்கூடிய ரசிகர்களின் மத்தியில் கீர்த்தி சுரேஷ் அண்மையில் தனியார் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அஜித்துடன் மட்டும் இதற்கு முடியாது என்ற சொல்லியிருக்கும் பேச்சானது தற்போது வேகமாக பரவி வருகிறது.

இதைத்தொடர்ந்து ஏற்கனவே மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு இவரது படம் தமிழில் தொடர்ந்து தோல்விகளை பெற்று வருவதை அடுத்து அஜித்துடன் எதனால் நோ சொன்னார் என்பது போல ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.

No சொன்ன கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்..

இந்நிலையில் எதனால் அஜித்துடன் நோ சொன்னார். அந்த No என்ற வார்த்தையை பயன்படுத்தினால் என்பதை தெரிந்து கொள்ளலாம். அந்தப் பேட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு தல அஜித்தோடு இணைந்து நடிக்க எக்கச்சக்க விருப்பம் உள்ளதாக சொல்லி இருக்கிறார்.

ஆனால் அவர் நடிக்கக்கூடிய படத்தில் அஜித்துக்கு தங்கையாக மட்டும் நடிக்க மாட்டேன் ஜோடியாக தான் நடிப்பேன் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் போது நான் தங்கி இருந்த ஹோட்டலில் தான் தல அஜித்தை பார்த்தேன் என்பதையும் பகிர்ந்திருக்கிறார்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு அஜித்தின் மனைவி ஷாலினி கீர்த்தியின் அம்மாவுடன் பல படங்களில் நடித்திருக்கிறார் என்பதை சொல்லி இருப்பதோடு கட்டாயம் தல அஜிதோடு நடிக்கக்கூடிய வாய்ப்பு அதுவும் ஹீரோயினியாகவே நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam