Goat படத்தால் பல கோடி நஷ்டம்...? ரிலீசுக்கு முன்னே இப்படி சொல்லிட்டாரே அர்ச்சனா கல்பாத்தி!

GOAT படத்தால் பல கோடி நஷ்டம்…? ரிலீசுக்கு முன்னே இப்படி சொல்லிட்டாரே அர்ச்சனா கல்பாத்தி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை அர்ச்சனா கால்பாத்தி தயாரித்து வருகிறார். படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

Goat படத்தால் பல கோடி நஷ்டம்...? ரிலீசுக்கு முன்னே இப்படி சொல்லிட்டாரே அர்ச்சனா கல்பாத்தி!

இரட்டை வேடத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

கோட் திரைப்படம்:

இந்த ட்ரைலர் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது என்று சொல்லலாம். முன்னதாக படத்தில் இடம் பெற்ற மூன்று பாடல்களும் வெளியான நிலையில் அடுத்ததாக டிரைலர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பிரசாந்த், பிரபுதேவா, ஹஜ்மல், பிரேம்ஜி, ஜெயராம், சினேகா, மீனாட்சி சௌத்ரி, ஒய் ஜி மகேந்திரன், லைலா, உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் .

Goat படத்தால் பல கோடி நஷ்டம்...? ரிலீசுக்கு முன்னே இப்படி சொல்லிட்டாரே அர்ச்சனா கல்பாத்தி!

அது மட்டும் இல்லாமல் பல வருடங்களுக்கு பிறகு சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்த மைக் மோகன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்பது மேலும் ஒரு சுவாரசியமான தகவலாக பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை மற்றும் பேக்ரவுண்ட் மியூசிக் ஆகியவை ஏற்கனவே டிரைலர் மற்றும் பாடலில் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்ப்பை எகிறவைத்த ட்ரைலர்:

வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் கடைசி கட்ட வேலைகள் மும்முறமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படு பிஸியாக படக்குழு ஈடுபட்டு இருக்கிறது. அப்பா விஜய் மகன் விஜய் என இரட்டை வேடத்தில் விஜய் திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

ட்ரைலரில் அப்பா விஜய் சால்டன் பெப்பர் லுக்கில் ஹேர் ஸ்டைல் கண்ணாடி அணிந்த தோற்றத்தில் காணப்படுகிறார் .

Goat படத்தால் பல கோடி நஷ்டம்...? ரிலீசுக்கு முன்னே இப்படி சொல்லிட்டாரே அர்ச்சனா கல்பாத்தி!

இந்த திரைப்படத்தில் காந்தி என்ற ரோலில் விஜய் நடித்திருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் சமீபத்தில் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மற்றும் இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சிகளில் வெங்கட் பிரபு மற்றும் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனாக்கள் பார்த்து இருவரும் கலந்து கொண்டனர் .

அப்போது பத்திரிகையாளர் கேள்விகளுக்கு தொடர்ச்சியாக பதில் அளித்து வந்த அர்ச்சனா கல்பாத்தியிடம் பத்திரிகையாளர் ஒருவர் விஜய்யின் கோட் படத்தை தயாரிப்பதற்காக அதிக பட்ஜெட் என்று நீங்கள் சொன்னீர்கள்…அந்த பட்ஜெட்டுக்கு ஈடு செய்யும் அளவுக்கு உங்களுக்கு வியாபாரம் திருப்தியாக இருந்ததா?
என கேள்வி கேட்டிருந்தார் .

ரிலீசுக்கு முன்னே ஒப்பனா கூறிய அர்ச்சனா:

அதற்கு பதில் அளித்த அர்ச்சனா…ஆம் படம் லாபம் தான். இப்போதே கிட்டத்தட்ட லாபம் தான். எனக்கு இதுவே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறியிருந்தார்.

கோட் படம் வெளியாவதற்கு முன்னதாகவே இவ்வளவு ஓப்பனாக படம் லாபம் அடைந்து விட்டதாக அர்ச்சனா கூறியிருப்பதால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரிக்க செய்திருக்கிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

அந்த படத்தோடா இன்னொரு வெர்ஷனா நந்தன்.. படம் எப்படி இருக்கு..? பாத்தவங்க என்ன சொல்றாங்க..! திரை விமர்சனம்..!

இன்று வெளியான திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற திரைப்படமாக நந்தன் திரைப்படம் இருந்து வருகிறது. சசிகுமார் நடித்து வெளியாகி இருக்கும் …