தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த சிவாஜி முதல் எம்ஜிஆர் வரை அனைவரோடும் இணைந்து நடித்த நடிகை சாவித்திரி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
நடிகையர் திலகம் என்ற பட்டத்திற்கு சொந்தக்காரியாக விளங்கிய இவரைப் பற்றி ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ் அண்மை பேட்டி ஒன்று கூறிய விஷயம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்தப் பேட்டியில் அவர் என்ன பேசினார் எதற்காக நடிகையர் திலகம் பற்றி இப்படி சொன்னார் என்பது பற்றிய விரிவான தகவலை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.
காதல் மன்னன் ஜெமினி கணேசன்..
திரை உலகில் மட்டுமல்லாமல் ரியல் லைஃப்லும் காதல் மன்னனாக திகழ்ந்த ஜெமினி கணேசன் நான்கு பெண்களை திருமணம் செய்திருந்தார். இதில் மூத்த மனைவியின் பெயர் அலமேலு, இரண்டாவது மனைவியின் பெயர் புஷ்பவல்லி, மூன்றாவது மனைவி தான் சாவித்திரி, நான்காவது மனைவியின் பெயர் ஜூலியான ஆண்ட்ரூ என்பதாகும்.
இதில் ஜெமினி கணேசனின் மூத்த மனைவிக்கு நான்கு மகள்களும், இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகள்களும், மூன்றாவது மனைவிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறார்கள்.
இதில் ஜெமினி கணேசனின் மூத்த மனைவிக்கு பிறந்த மகள் தான் கமலா செல்வராஜ் மிகச்சிறந்த மருத்துவராக விளங்கும் இவர் தன் தந்தையை குறித்தும் தனது தந்தையை டார்ச்சர் செய்து வந்த நடிகையர் திலகம் குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார்.
ராத்திரி அப்பாவ வீட்டுக்கு வர விடமாட்டாங்க..
அந்த விஷயத்தைப் பற்றி அவர் பேசும் போது சினிமா துறையில் இருக்கும் பெண்கள் பலருக்கும் தன் அப்பா மேல் ஒரு கண் எப்போதும் இருந்ததாகவும் தன் அப்பாவை பார்த்து மயங்காத பெண்களை இல்லை என்றும் கூறினார்.
அந்த வகையில் நடிகையர் திலகம் சாவித்திரி இரவு கொட்டும் மழையில் தங்களது வீட்டுக்கு ஓடி வந்த பெண் என்று கூறியதோடு மட்டுமல்லாமல் அவர் கெட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தான் அவருக்கு தாலி கட்டி மனைவியாக என் அப்பா வாழ்க்கை கொடுத்தார்.
தமிழ் பேசத் தெரியாத கையெழுத்து போட தெரியாத சாவித்திரிக்கு எல்லாவற்றையும் எனது அப்பா கற்றுக் கொடுத்ததோடு கார் ஓட்டவும், குதிரை சவாரி செய்யவும் கற்றுக் கொடுத்தது அடுத்து அவர் அதற்கு மாறாக என்ன செய்தார் என்று சொன்னால் நீங்கள் கவலைப்படுவீர்கள்.
நடிகையர் திலகம் சாவித்திரியை பொறுத்த வரை மிகவும் பொசசிவான கேரக்டர் கொண்டவர் சுமார் 15 வருடம் எங்கள் அப்பாவை மிரட்டி இரவு எங்கள் வீட்டுக்கு வரவிடாமல் வைத்திருந்தார்.
நடிகையர் திலகம் பத்தி ஜெமினி மகள் ஓப்பன் டாக்..
ஆனால் எங்கள் அம்மாவோ அப்பாவின் மேல் உயிரை வைத்திருந்தார். அதனால் தான் அவரை விவாகரத்து செய்து கொள்ளாமல் உசுரே போனாலும் அவரை விட்டு விலகாமல் இருந்தார்.
அப்படிப்பட்ட பாசமான குடும்பத்தை பிரித்த பெண் தான் நடிகையர் திலகம். அதுமட்டுமல்லாமல் அவர்களுடைய பொண்ணு அவங்கள வீட்ட விட்டு துரத்தியதால் தான் அண்ணா நகருக்கு சாவித்திரி போனார்.
அது மட்டுமா? வருமான வரி கூட தாக்கல் செய்யாமல் மற்றவர்களோடு கள்ள உறவு வைத்துக் கொண்டதால் தான் எல்லாவற்றையும் இழந்து கடைசியில் சீரழிந்தார் என்று சாவித்திரி பற்றி கமலா செல்வராஜ் கூறிய விஷயம் தற்போது இணையம் எங்கும் வேகமாக பரவி வருகிறது.
இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் நடிகையர் திலகம் சாவித்திரிக்குள் இப்படி ஒரு குணம் இருக்கிறதா? என்று சந்தேகத்தோடு பேசி வருகிறார்கள்.