நடிகர் விஜய் கட்சி தொடங்குவதாக கூறியது முதலே அது குறித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் அதிகரிக்க துவங்கியது. ஏனெனில் விஜய் கட்சித் தூங்குவார் என்கிற பேச்சே காவலன் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் இருந்தே இருந்து வந்தது.
ஆனால் விஜய் அதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் இருந்து வந்தார். அதற்கு பிறகு அவர் நடித்த கத்தி, சர்க்கார் மாதிரியான திரைப்படங்களில் அவர் தொடர்ந்து அரசியல் பேசியதை அடுத்து கண்டிப்பாக விஜய் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டது.
மற்ற நடிகர்களை போன்று சொல்லிக்கொண்டே இல்லாமல் திடீரென கட்சியை துவங்கினார் விஜய். இந்த வருட துவக்கத்தில் அவர் கட்சி துவங்கிய பொழுது இனி சினிமாவில் நடிக்க போவதில்லை கட்சியில்தான் முழு ஈடுபாடாக இருக்க போவதாக கூறினார் விஜய்.
விஜய் கட்சி கொடி:
இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தாலும் விஜய்யின் அடுத்த அரசியல் நகர்வுக்காக ரசிகர்கள் காத்திருக்க துவங்கினர். இந்த நிலையில் கட்சியின் பெயரை தமிழக வெற்றி கழகம் என்று அறிவித்திருந்தார் விஜய். ஆனால் அதற்கான கொடி போன்ற எந்த விஷயத்தையும் அவர் அறிவிக்காமல் இருந்தார்.
சீக்கிரத்திலேயே அதை அறிவிப்பதாகவும் கூறினார் ஆனால் அதை அறிவிக்கவே எட்டு மாதங்கள் ஆகிவிட்டன. இந்த நிலையில் இன்று விஜய் அந்த கட்சியின் கொடியை அறிவித்தார். அந்த கொடி இரண்டு பக்கம் சிவப்பு நிறத்திலும் நடுவில் மஞ்சள் நிறத்திலும் இருக்கிறது.
யானையை நீக்கணும்
அதில் இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை பூவும் இருக்கிறது. அந்த வாகை பூவை சுற்றி 28 நட்சத்திரங்கள் இருக்கின்றன. இதுதான் இப்பொழுது கட்சியின் கொடியாக இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம் என்பதுதான் இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் பேச்சாக இருந்து வருகிறது.
கொடி குறித்த அர்த்தத்தையும் கட்சியின் கொள்கைகளையும் இன்னும் சில நாட்களில் அறிவிப்பதாக நடிகர் விஜய் கூறி இருக்கிறார். இந்த நிலையில் முதல் நாளே கட்சியின் கொடி குறித்து பிரச்சனை ஒன்று துவங்கி இருக்கிறது இந்த கட்சி கொடியில் யானை இடம் பெற்று இருப்பதற்கு பகுஜன் சமாஜ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
முதல் நாளே வந்த பிரச்சனை
யானையை கொடியிலிருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர் மேலும் இதற்காக விஜயின் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேச இருப்பதாகவும் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியினர் கூறியிருக்கின்றனர்.