தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவான நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர் பின்னணி பாடகர், திரைப்பட பாடல் ஆசிரியர் ,திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குனர் எப்படி பல திறமைகளை வெளிப்படுத்தி காட்டி தமிழ் சினிமாவில் நட்சத்திர பிரபலமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் .
நடிகர் தனுஷ்:
இவர் முதன் முதலில் கடந்த 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தில் மகேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமாகே இருந்தார்.
இந்த திரைப்படம் பலரது மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகி தனுஷை கிண்டலும் கேலியும் செய்தார்கள்.
இவரெல்லாம் ஒரு ஹீரோவா? இவரெல்லாம் நடிக்க வந்துட்டார் என பல விமர்சனங்கள் அவர் மீது விழுந்தது.
ஆனாலும் தனது முயற்சியை கைவிடாமல் காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், சுறா , சுள்ளான் , தேவதையை கண்டேன், அது ஒரு கனாக்காலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பரட்டை என்கிற அழகு சுந்தரம், பொல்லாதவன், யாரடி நீ மோகினி, படிக்காதவன் இப்படி தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தனக்கான தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார் தனுஷ் .
தனது திறமையை ஒவ்வொரு படத்திலும் மெருகேற்றி காட்டி இது நட்சத்திர ஹீரோவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இவரது வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களாக பார்க்கப்படுபவர் தான் அவரது அண்ணன் செல்வராகவன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் .
ஆரம்பத்தில் சப்போர்ட் பண்ண ரஜினி:
ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் திருமணம் செய்து கொண்ட பிறகு ரஜினி பல விதங்களில் தனது மருமகனின் படங்களுக்கு சப்போர்ட் செய்து வந்தார்.
இதனால் தான் தனுஷ் இன்று நட்சத்திர ஹீரோவாக ஜொலிக்க முடிந்தது என கூறுகிறது மறைமுகமாக மீடியாக்கள்.
இதுவரை 14 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் , 9 விஜய் விருதுகள் , 7தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள் , 5 விகடன் விருதுகள், 5 எடிசன் விருதுகள் , 4 தேசிய திரைப்பட விருதுகள் உள்ளிட்டவை பெற்றுள்ளார்.
அத்துடன் பிலிம் பேர் விருதுகள் என பல எண்ணற்ற விருதுகளை குவித்து வைத்திருக்கிறார் . இதனிடையே நடிகர் தனுஷ் தற்போது இயக்குனராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார் .
ராயன் வெற்றி:
தனுஷ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தான் ராயன். இந்த திரைப்படத்தை தானே இயக்கி நடித்து இருந்தார்.
இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், காளிதாஸ், ஜெயராம், செல்வராகவன், பிரகாஷ்ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அத்துடன் வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி வெளியாகி வசூலில் பட்டய கிளப்பி மிகப்பெரிய சாதனை செய்திருக்கிறது.
இந்த திரைப்படம் ரூ.85 கோடி பொருட்செலவில் உருவாகி தற்போது வரை கிட்டத்தட்ட ரூ. 158 கோடிக்கும் அதிகமாக வசூலிட்டி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது.
டபுள் தமாக்கா பரிசு:
இந்நிலையில் படத்தின் மாபெரும் வெற்றியை அடுத்து தனுஷுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கலாநிதிமாறன் தனுஷை அழைத்து படத்தை இயக்கியதற்கு ஒரு செக்… நடித்ததற்கு ஒரு செக் என டபுள் தமாக்கா பரிசு கொடுத்து அவரை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி தனுஷுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்கள் .
முன்னதாக ரஜினியின் ஜெயிலர் படம் ஹிட்டானத்திற்கு அப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார், ரஜினிகாந்த் மற்றும் அனிருத் உள்ளிட்டவருக்கு சொகுசு கார்களை பரிசாக கொடுத்திருந்தது குறிப்பிடுத்தக்கது.