நடிகர்களை பொருத்தவரை அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும் எல்லா திரைப்படத்திலும் அவர்கள் நடித்து விடுவது கிடையாது. பெரும்பாலும் கதை பிடித்திருந்தால் நடிப்பார்கள் அல்லது இயக்குனர்கள் தெரிந்தவர்களாக இருந்தால் நடிப்பார்கள்.
ஏனெனில் இப்பொழுது இருப்பது போல அப்பொழுதெல்லாம் புதுமுக இயக்குனர்களை அவ்வளவு எளிதாக பெரிய நடிகர்கள் நம்பி விட மாட்டார்கள். குறைந்தது ஒரு 10 படமாவது இயக்கியிருந்தால்தான் பெரிய நடிகர்கள் திரைப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
அதில் விஜயகாந்த், கமல்ஹாசன் மாதிரியான ஒரு சில நடிகர்கள் விதிவிலக்காக இருந்தனர். அவர்கள் புதுமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்புகளை கொடுத்தனர். அந்த வகையில் நடிகர் அஜித் அவருக்கு பிடிக்காமல் அல்லது வேறு காரணங்களால் வேண்டாம் என்று நிராகரித்த மூன்று திரைப்படங்கள் பிறகு தமிழில் பெரும் வெற்றியை கொடுத்தது.
நேருக்கு நேர்:
அவற்றை இப்பொழுது பார்க்கலாம் அதில் முதலில் இருக்கும் திரைப்படம் நேருக்கு நேர். நேருக்கு நேர் திரைப்படத்தில் சூர்யாவும் விஜய்யும் சேர்ந்து நடித்திருந்தனர். அந்த படம்தான் நடிகர் சூர்யாவிற்கு முதல் திரைப்படம்.
ஆனால் முதலில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிகர் அஜித்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படத்தின் இயக்குனருக்கும் அஜித்திற்கும் இருந்த ஏதோ ஒரு கருத்து வேறுபாட்டின் காரணமாக அஜித் அந்த படத்தில் நடிக்கவில்லை அதற்கு பிறகுதான் சூர்யாவை அவர் அறிமுகப்படுத்தி இருந்தார்.
அஜித் மட்டும் அப்பொழுது அதில் விஜய்யோடு சேர்ந்து நடித்திருந்தால் அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படமாக நேருக்கு நேர் திரைப்படம் இருந்திருக்கும்.
ஜீன்ஸ்:
அதற்கு பிறகு அஜித் தவறவிட்ட திரைப்படம் ஜீன்ஸ். ஜீன்ஸ் திரைப்படத்தின் கதையை இயக்குனர் ஷங்கர் எழுதும் பொழுது அஜித்துக்காகதான் எழுதினேன் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால் அப்பொழுது இந்த விஷயத்தை அறிந்த தியாகராஜன் சம்பளம் குறைவாக கொடுத்தாலும் பரவாயில்லை.
தனது மகனை வைத்து அந்த படத்தை இயக்க வேண்டும் என்று ஷங்கரிடம் கேட்டுக் கொண்டார் .அதனை தொடர்ந்துதான் ஷங்கர் அந்த திரைப்படத்தில் நடிகர் பிரசாந்தை நடிக்க வைத்திருக்கிறார்.
கஜினி:
மூன்றாவதாக அஜித் தவறவிட்ட திரைப்படம் கஜினி. கஜினி திரைப்படம் தமிழில் மட்டுமல்லாமல் பிறகு ஹிந்திகளும் ரீமேக் ஆகி பெரும் வெற்றியை கொடுத்த திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு அஜித்திடம் கேட்ட பொழுது அவர் ஏற்கனவே அப்பொழுது வேறு படத்தில் நடித்து கொண்டிருந்தார்.
எனவே மொட்டை அடித்துக் கொண்டு இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார். மேலும் அது பார்ப்பதற்கு நன்றாக இருக்காது என்றும் கூறிவிட்டார் அஜித். அதனை தொடர்ந்து அந்த திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்தார்.
திருமலை:
அடுத்து அஜித் அவரிடம் மற்றொரு படம் திருமலை. திருமலை திரைப்படத்தின் கதையை எழுதும் பொழுது அஜித்துக்காகதான் எழுதி இருக்கிறார் இயக்குனர்.
ஆனால் அஜித் அதே மாதிரி தீனா திரைப்படத்தில் ஏற்கனவே நடித்து விட்டதால் அதற்கு பதிலாக அந்த படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர்.