டச் பண்ணவே முடியல.. கை எல்லாம் நடுங்குது!.. ஆவி பயத்தால் ஆடிப்போன வி.ஜே அர்ச்சனா..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் வி.ஜே அர்ச்சனா. பிக் பாஸ் ஏழாவது சீசன் கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த பிக்பாஸ் சீசனில் வயில் கார்ட் ரவுண்டு மூலமாக உள்ளே என்ட்ரி ஆனார் வி.ஜே அர்ச்சனா.

ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடைக்கவே இல்லை ஆனால் அங்கு சென்ற பிறகு தொடர்ந்து அங்கு இருக்கும் மாயாவின் கூட்டத்தால் கேளிக்கு உள்ளாக்கப்பட்டார் அர்ச்சனா. இதனால் மக்கள் மத்தியில் அவர் மீது அதிக அனுதாபம் ஏற்பட்டது.

அந்த அனுதாபம்தான் அர்ச்சனாவை ஜெயிக்க வைத்தது என்று கூறலாம். அதற்குப் பிறகு டைட்டில் வின்னரான பிறகு நிறைய படங்களிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் வி.ஜே அர்ச்சனா டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

ஆடிப்போன வி.ஜே அர்ச்சனா

ஏற்கனவே வி.ஜே அர்ச்சனாவிற்கு பேய் என்றால் அதிக பயம் என்று ஒரு பேச்சு உண்டு. இதுகுறித்து அவர் ஏற்கனவே ஒரு பேட்டியிலும் கூறியிருக்கிறார். ஒரு முறை காரில் சென்ற பொழுது நேரில் பேயை பார்த்ததாக அவர் ஒரு முறை பேசி இருந்தார்.

அதனை தொடர்ந்து அந்த சமயத்தில் அது மிகவும் சர்ச்சையாகி வந்தது ஆனாலும் அவ்வளவு பேய் பயம் இருந்தாலும் கூட படத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை விட முடியாது என்கிற காரணத்தினால் பேய் படம் என்றாலும் கூட பரவாயில்லை டிமாண்டி காலனி 2 வில் நடித்தார் அர்ச்சனா.

ஆவி பயம்:

இந்த நிலையில் இந்த படத்திற்கான ப்ரமோஷனுக்கு வந்த பொழுது இவர் அதிக பயத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது. பொதுவாக ப்ரோமோஷனில் மிகவும் இன்ட்ரஸ்ட் ஆக செல்ல வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை செய்வது உண்டு.

அந்த வகையில் மெஜிசியன் ஒருவரை அழைத்து வந்து வி.ஜே அர்ச்சனாவிற்கு வித்தை காட்டி வந்தனர். அந்த சமயத்தில் அவர் ஒரு அமானுஷ்யமான மேஜிக் ஒன்றை செய்து காட்டினார். அதன்படி இறந்தவர்களின் பெயரை அர்ச்சனா நினைத்துக் கொள்ள வேண்டும்.

ஆடிப்போன வி.ஜே அர்ச்சனா

அதை அந்த மெஜிசியன் கண்டுபிடிப்பார் என்பதாக அந்த டாஸ்க் இருந்தது. அப்பொழுது அந்த நபர் செய்த சில விஷயங்கள் அர்ச்சனாவிற்கு படபடப்பை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து என்னால் உங்கள் கையை டச் பண்ணவே முடியவில்லை.

ரொம்ப நடுக்கமாக இருக்கிறது என்று பயந்து இருக்கிறார் அர்ச்சனா ஆனாலும் அந்த மேஜிசியன் அர்ச்சனா எந்த இறந்த நபரின் பெயரை நினைத்தாரோ அதே பெயரை சொல்லி மேலும் அர்ச்சனாவிற்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். இந்த வீடியோ தற்சமயம் அதிக வைரலாக தொடங்கி இருக்கிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam