சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர்நீச்சல் சீரியலில் பக்காவாக தனது கேரக்டர் ரோலை செய்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு பெயரை அள்ளிச் சென்ற சீரியல் நடிகை ஹரிப்பிரியா பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.
இவர் கனா காணும் காலங்கள் மூலம் சீரியலில் நடிகையாக அறிமுகம் ஆனதை அடுத்து பல திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்து இரட்டை குதிரையில் பயணிக்கும் நடிகையாக விளங்குகிறார்.
என்னை கொஞ்சி கிழிக்க வேணாம்..
நடிகை ஹரிபிரியா இசை 2015-ஆம் ஆண்டு வெளி வந்த லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள் போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார். மேலும் 2019-ஆம் ஆண்டு வெளி வந்த கண்மணி தொடரில் ஆன்ட்டி ஹீரோயினி ரோலை மிகவும் அற்புதமாக செய்தவர்.
இந்நிலையில் இவர் 2012-ஆம் ஆண்டு தொலைக்காட்சி நடிகரான விக்னேஷ் குமாரை திருமணம் செய்து கொண்டு கருத்து வேற்றுமை ஏற்பட்டதை அடுத்து 2020-ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்.
இதை அடுத்து 2021-ஆம் ஆண்டு இமைகள் சிந்திய ஒரு பார்வை என்ற குறும்படத்தில் நடித்த இவர் 2022-ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்ததோடு என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.
மேலும் 2023-ஆம் ஆண்டு கருங்காப்பியம் என்ற படத்தில் அற்புதமாக தனது கேரக்டரை செய்து அனைவரது பாராட்டுதல்களையும் பெற்றிருக்கிறார்.
இதை பண்ணு போதும்..
சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய ஹரிப்பிரியா இசை தற்போது instagram பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் வீடியோவானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் இவர் தன் கணவரிடம் எனக் கொஞ்ச வேணாம் இதை பண்ணு போதும் உனக்காகத்தானே நான் காத்திருக்கிறேன், என்னிடம் பேச மாட்டாயா என்பது போன்ற வசனங்களை மிகச் சிறப்பான முறையில் பேசி நடித்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் கணவர் வாங்கி கொடுத்த பொட்டு, பூ, புடவை என அனைத்தையும் போட்டு அழகினை வெளிப்படுத்தி இருக்கக்கூடிய இவர் அதை பார்க்க தனது கணவர் கூட இல்லாமல் விட்டு செல்வது பற்றி விவகாரமாக பேசி வார்த்தைகளை கொட்டி தீர்த்து இருக்கிறார்.
சீரியல் நடிகை ஹரிப்பிரியா ஆவேசம்..
தற்போது இந்த வீடியோவானது ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் பேசும் பொருளாக மாறி உள்ளதை அடுத்து ஹரிப்பிரியா இசையின் ஆவேசம் எல்லா பெண்களுக்கும் ஏற்படுகின்ற இயல்பான ஒன்று தான் என்று சொல்லி இருக்கிறார்கள்.
இன்னும் சில பெண்கள் அதை மனதுக்குள் அப்படியே வைத்து மூடி விடுவார்கள். ஆனால் இவர் சிவகாசி பட்டாசு போல் வெடித்து சிதறிவிட்டார் என்று சொல்லி அவரது நடிப்பை பாராட்டி வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவானது இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் வீடியோக்கள் ஒன்றாக மாறிவிட்டதோடு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றபடி இருக்கும் வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது.
நீங்களும் இந்த வீடியோவை பார்க்க விரும்பினால் கீழ் இருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதுமானது ஆவேசமாக பேசியிருக்கும் ஹரிப்பிரியாவின் வசனங்கள் உங்களையும் சுண்டி இருக்கும்.