நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியது முதலே முன்பு இருந்ததைவிட இப்பொழுது அதிகமாக பிரபலமாகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். முன்பெல்லாம் விஜயின் படங்கள் குறித்த பேச்சுக்கள் மட்டும்தான் அதிகமாக இருக்கும்.
இப்பொழுதெல்லாம் விஜய்யின் அரசியல் குறித்த பேச்சுகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் விஜய் மீது மக்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளே என்று கூறப்படுகிறது. அவரது நடவடிக்கைகளை மக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.
விஜய்யின் அரசியல்:
கண்டிப்பாக விஜய் ஒரு கடுமையான போட்டியாளராக அரசியலில் இருப்பார் என்பது நிறைய அரசியல்வாதிகளின் கருத்தாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜனவரியில் கட்சியின் பெயர் அறிவித்த விஜய் அதற்கு பிறகு கட்சி தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பும் கொடுக்காமல் இருந்தார்.
எப்படியும் அறிவிப்பு தாமதமாகதான் வரும் என்று நினைத்து வந்த நிலையில் சமீபத்தில் தனது கட்சியின் கொடி குறித்த அறிவிப்பை வெளியிட்டார் விஜய். அதன்படி இரண்டு யானைகளையும் வாகை பூவையும் கொண்ட அவரது கட்சியின் கொடி சமீபத்தில் வெளியானது. அந்த கொடிக்கான அர்த்தம் என்ன என்பதே பலரது கேள்வியாக இருந்தது.
ரஜினியின் அரசியல் நகர்வு:
அந்த கொடிக்கான அர்த்தத்தையும் அதே சமயம் தனது கட்சியின் கொள்கையையும் சீக்கிரத்தில் வெளியிடுவேன் என்று கூறியிருக்கிறார் விஜய். எனவே கட்சியின் கொடிக்கும் விஜயின் கட்சி கொள்கைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு நடுவே நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து திமுகவின் செயல்பாடுகளில் ஆர்வம் காட்டி வருவதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா தொடர்பாக ஒரு விழா நடந்தது. கலைஞர் குறித்த புத்தகம் ஒன்றை வெளியிடும் விழா ஒன்று நடந்தது.
ப்ளூ சட்டை மாறன் சொன்ன தகவல்
அதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தொடர்ந்து திமுக குறித்து நல்ல விதத்தில் பேசியிருந்தார் எனவே அரசியலில் விஜய்க்கு எதிராக ரஜினி இறங்கி இருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் பிரபல விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் அது உண்மைதான் என தெரிவிக்கும் வகையில் சில மீம்களை வெளியிட்டு வருகிறார்.
அதன்படி சினிமா துறை அரசியல் இரண்டிலுமே ரஜினி விஜய்யுடன் போட்டியிட தயாராக இருக்கிறார் படத்தின் கலெக்ஷனை பொறுத்த வரை விஜய்யின் இரண்டு திரைப்படங்களை விடவும் தனது படம் அதிக கலெக்ஷனை கொடுக்க வேண்டும் என்பதே ரஜினியின் எண்ணமாக இருக்கிறது என்பது போன்ற வெளியிட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன். இது அதிக வைரலாகி வருகிறது.