என்ன துரைமுருகன் நக்கலா..? பல்லு போன கிழவனா..? விளாசும் பிரபலம்..!

தமிழ் திரை படங்களில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய நடிகர்களில் முக்கிய நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். சூப்பர் ஸ்டார் பேச ஆரம்பித்தால் ஒவ்வொரு பேச்சும் சர்ச்சையை கிளப்பி விடக் கூடிய வகையில் இருப்பதால் எந்த ஒரு மேடையிலும் பேச அதிகம் விரும்ப மாட்டார்.

எனினும் அண்மையில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் எ மா வேலுவின் நூல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பினை தந்திருந்த காரணத்தை அடுத்து அந்த விழாவில் அவர் சென்று உரையாற்றிய போது சில விஷயங்களை பேசி சர்ச்சையை கிளப்பி விட்டார்.

என்ன துரைமுருகன் நக்கலா..?

லால் சலாம் படப்பிடிப்பின் போது தன்னை எமா வேலுவின் கல்லூரியில் தான் தங்க வைத்திருந்தார்கள். அந்த நன்றி கடனை தீர்க்கவே இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்ததாக சொல்லியதோடு மட்டுமல்லாமல் மிகச் சிறப்பான முறையில் பேசி வந்த ரஜினிகாந்த் திடீர் என ஓல்ட் ஸ்டுடென்ட் பற்றியும் நியூ ஸ்டுடென்ட் பற்றியும் பேசினார்.

இதில் ஓல்டு ஸ்டூடண்ட் பற்றி கூறிய போது திமுகவின் முன்னணி முக்கிய சீனியர் அரசியல்வாதியான துறைமுருகன் பற்றி சில விஷயங்களை பேசி இருந்தார். இதனை அடுத்து இவர் துரைமுருகனை நக்கலாக பேசியதாக பலரும் பல்வேறு வகையான விமர்சனங்களை செய்திருந்தார்கள்.

எப்போதுமே ரஜினிகாந்தை பொறுத்த வரை மேடையில் எந்த விஷயத்தை பேசினாலும் அது சர்ச்சையாக மாறிவிடுவதோடு மட்டுமல்லாமல் அவர் பற்றி பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்து விடுவதால் தான் பொதுவாக மேடைப்பேச்சை அவர் விரும்புவதில்லை என்ற விஷயத்தை செய்யார் பாலு தெரிவித்து இருந்தார்.

ரஜினி பல்லு போன கிழவனா..?

ஏற்கனவே ஊடகத்துறையில் பணிபுரிபவர்களுக்கு சொல்லவா வேண்டும் வெறும் வாயை மெல்லக்கூடிய இவர்களுக்கு ஆவல் கிடைத்தது போல் ரஜினியின் பேச்சு அமைந்து விட்டதை அடுத்து துரைமுருகனை சந்தித்த சமயத்தில் என்ன ரஜினி உங்களை இப்படி பேசியிருக்கிறார் என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து துரைமுருகனும் வயது ஆனாலும் பல்லு போனாலும் சினிமா துறையை விட்டு விலக மாட்டேன் என்று பலரும் அடம்பிடித்து வருவதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறார்கள். அந்த வகையில் ரஜினியை மறைமுகமாக கிண்டலாக சொல்லி இருக்கிறார். இதனை அடுத்து ரஜினி என்ன பல்லு போன கிழவனா என்று சர்ச்சையை கிளப்பி விட்டார்கள்.

இதனை அடுத்து எந்த விஷயமானது தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் சிந்தனையை ஏற்படுத்தி விட்ட விஷயமாக மாறிவிட்டது. அத்தோடு நின்று விடாத ஊடகத் துறையினர் ரஜினியிடம் துரைமுருகன் பேசிய பேச்சு பற்றி கேட்டிருந்தார்கள்.

அது ஒன்றும் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவரது எனது நீண்ட கால நண்பர் என்று ஒற்றை வரியில் பதிலளித்து ரஜினி அந்த இடத்தை காலி செய்தார்.

விளாசும் பிரபலம்..

இதற்குக் காரணம் மூத்த அமைச்சர்களை வைத்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் கஷ்டப்படுவது போல ரஜினியின் பேசி இருந்ததாக சித்தரிக்கப்பட்ட நிலையில் அதே மாதிரி தான் மூத்த நடிகர்கள் எல்லாம் வயதாகி போய் தாடி வளர்த்து பற்கள் விழுந்து வயதில் நடிப்பதால் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை என்று துரைமுருகன் பேசி இருக்கிறார்.

இதை அடுத்து ரஜினிகாந்த் நினைத்திருந்தால் அரசியலில் நுழைந்து கலை கட்டி இருக்கலாம். ஆனாலும் அதை விட்டு விலகி இன்று வரை நாசுக்காக நடந்து கொள்கிறார் .இவரைப் பற்றி ஏடாகூடமாக ஊடகங்களில் செய்தி வருவதோடு மட்டுமல்லாமல் இப்படி சிக்கல்களையும் ஆரம்ப நாட்களில் இருந்து சந்தித்து வருகிறார் ரஜினிகாந்த் என பிரபலமான செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam