தமிழ் திரை உலகில் பல்வேறு இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்களின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக அண்மை காலங்களில் வெற்றி படங்களை கொடுத்து வெகுஜனங்களைக் கவர்ந்திருக்கக் கூடிய இயக்குனர்களின் வரிசையில் மாரி செல்வராஜ் தனக்கு என்று ஓர் தனி இடம் பிடித்திருக்கிறார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்த வாழை திரைப்படம் அமோக வெற்றியை பெற்று பட்டையை கிளப்பி வருகின்ற நிலையில் இந்த படத்தின் கதை பலரையும் கவரக்கூடிய விதத்தில் உள்ளதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.
வாழை திரைப்படம்..
வாழை திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து மாரி செல்வராஜ் பல்வேறு பேட்டிகளில் இந்த படத்தின் கதை பற்றி கூறியிருந்தார். அதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை தான் மையமாகக் கொண்டு இந்த படத்தை இயற்றியதாக சொல்லி இருக்கிறார்.
எனினும் தற்போது இந்த கதை தன்னுடையது என்று சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன் ஊடகங்களில் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை மாரி செல்வராஜ்க்கு பெற்று தந்திருக்க கூடிய இந்த படத்தை இவர் பார்த்ததாகவும் இதற்கு முன்னரே தன்னுடைய நண்பர்கள் போன் செய்து வாழைப்பழம் பார்க்க சென்ற விவரத்தை சொன்னதாகவும் சொல்லியிருக்கிறார்.
இவர் அப்படி சொன்னதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய சிறுகதையைத் தான் மாரி செல்வராஜ் அப்படியே காப்பி அடித்து படமாக மாற்றி இருப்பதாக சொன்னார்.
அட்லியா மாறி காப்பி அடிச்சாரா? மாரி செல்வராஜ்..
இந்த விஷயத்தை கேள்விப்பட்டு அனைவரும் திகைத்துப் போய் சர்ச்சைகள் பெருமளவு கிளம்பியுள்ள நிலையில் இவர் 10 ஆண்டுகளுக்கு முன்னரே நான் வாழையடி என்கின்ற பெயரில் சிறுகதை ஒன்றை எழுதியதாகவும் கூறியிருக்கிறார்.
இந்த சிறுகதையில் வாழையடி வாழையாக சிறுவர்கள் படும் கஷ்டங்களை எழுதியதோடு அந்த கதையில் காட்சிப்படுத்தப்பட்ட அத்தனை விஷயங்களும் இந்த வாழை படத்தில் இருக்கிறது.
மேலும் சினிமாவிற்கு தேவையான எல்லாவற்றையும் அந்த கதையோடு இணைத்து படமாக தந்திருக்கிறார்களே ஒழிய அதில் காட்டப்பட்ட சிறுவர்களின் உழைப்பு, கூலி உயர்வு, ரஜினி, கமல் பனியன் போட்டு பண்ணிய விஷயம் எல்லாம் கிட்டத்தட்ட என் புத்தகத்தில் இருக்கும் கதை போலவே உள்ளது.
வாழைத்தார் சுமப்பது முதல் சிறுவர்களின் உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது என்பதைத்தான் நான் அந்த சிறுகதையில் எழுதினேன். அதுதான் வாழை படத்தின் மையக்கருவாக உள்ளது என்று எழுத்தாளர் சோ தர்மன் பகிர்ந்திருக்கும் விஷயம் தற்போது பரபரப்பாகிவிட்டது.
எழுத்தாளர் சோ தர்மன்..
மேலும் எழுத்தாளர் சோ தர்மன் வாழை படத்தை பற்றி சொல்லும் பொழுது இவர் தனது சிறுகதையை அச்சு கூடத்தில் கொண்டு வந்ததை அப்படியே காட்சி ஊடகத்தில் மாரி செல்வராஜ் கொண்டு வந்து விட்டார் என்று உறுதிபட பேசினார்.
இதுதான் தான் எழுதிய சிறுகதைக்கும் அவர் அமைத்த காட்சிகளுக்கும் இடையே இருக்கின்ற வித்தியாசம் என்பதை கூறியதோடு இந்த சிறுகதையை அவர் வாழைத்தோட்டம் நிறைந்த ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் தங்கி இருந்த போது எழுதினேன் என்பதையும் பகிர்ந்து விட்டார்.
அதுமட்டுமல்லாமல் அங்கு வேலை பார்க்கும் சிறுவர்களிடம் பேசியதின் மூலம் இந்த சிறுகதையை எழுதிய நான் ஒருவேளை என்னுடைய கதையை மாரி செல்வராஜ் படிக்காமல் கூட இருந்திருக்கலாம். நாங்கள் இருவரும் ஒரே பிரச்சனையை கையாண்டு உள்ளதால் இரண்டுமே ஒன்றாக உள்ளது என்ற கருத்தையும் ஓபன் ஆக தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் அட்லியைப் போல மாரி செல்வராஜ் கதையை காப்பி அடித்து கதைக்களத்தை அமைத்து திரைப்படத்தை முடித்து விட்டாரா என்ற ரீதியில் பேசி வருகிறார்கள்.