சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுறீங்களே..! அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து கமல் பட நடிகை கொடுத்த அதிர்ச்சி பதில்…!

சமீப காலமாக மலையாளத்தில் நடந்து வந்த அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்த விஷயங்கள்தான் இந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது.

எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் ரீதியான பிரச்சனைகள் இருந்து வருகின்றன என்றாலும் கூட சினிமாவில் அது மிக அதிகமாகவே இருந்து வருகிறது. ஆனால் பல காலங்களாகவே அரசு மற்றும் நடிகர் சங்கம் என யாராலும் கண்டுகொள்ளப்படாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.

அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை

இதனால் நடிகர்கள் பலரும் அவர்கள் இஷ்டத்திற்கு பல விஷயங்களை சினிமாவில் செய்து வருகின்றனர். ஆனாலும் பெரும்பாலான அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் வெளியில் தெரிவது கிடையாது. இந்த நிலையில் முதன்முறையாக கேரளா அரசு இதற்கு எதிராக நடவடிக்கையை எடுத்தது.

ஓய்வு பெற்ற நீதிபதியான ஹேமா என்பவரின் தலைமையில் ஹேமா கமிட்டி என்கிற குழுவை அமைத்தது கேரள அரசு. மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை உருவாக்குமாறு  அந்த குழுவிடம் கூறப்பட்டது.

கமல் பட நடிகை

அந்த வகையில் ஹேமா கமிட்டி உருவாக்கிய ஆய்வறிக்கை தற்சமயம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா மலையாள சினிமாவில் இருக்கும் பெரிய பெரிய நடிகர்களின் பெயர்கள் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்சமயம் நடிகர் மோகன்லால் உட்பட பல பிரபலங்கள் நடிகர் சங்கத்தில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருக்கின்றனர். இது மேலும் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தும் விஷயமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிரபலங்கள் பலரிடமும் இது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. மலையாளத்திலும் தமிழிலும் பிரபல நடிகராக இருக்கும் நடிகர் பிரித்திவிராஜ் கூட இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது ஹேமா கமிட்டியில் கூறப்படும் நடிகர்கள் மீது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

சம்பந்தமே இல்லாத மாதிரி பேசுறீங்களே

இந்த நிலையில் தமிழிலும் மலையாளத்திலும் பிரபலமான நடிகை அபிராமியிடம் இதுக்குறித்து கேட்ட பொழுது அவர் அதற்கு பதில் கூறாமல் நான் படத்தின் பிரமோஷனுக்கு வந்திருக்கிறேன். இது எனக்கு சம்பந்தம் இல்லாத கேள்வி. சம்பந்தப்பட்டவர்களிடம் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் ஆரம்பத்தில் 1995ஆம் ஆண்டு முதன்முதலாக அபிராமி மலையாளத்தில்தான் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு 2000 வரை கிட்டத்தட்ட 7 திரைப்படங்களில் மலையாளத்தில் இவர் நடித்திருக்கிறார் அப்படி இருந்துமே கூட மலையாள சினிமாவுக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்பது போல பேசியிருக்கிறார் அபிராமி.

இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது ஒரு பெண் நடிகையாக இவர் இந்த விஷயத்தில் குரல் கொடுத்திருக்க வேண்டுமே ஏன் இப்படி அதில் இருந்து நழுவுகிறார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam