பாவிக.. புடவைய நாலா பக்கம் மறச்சும் விடல.. பதிம வயசு கண்றாவிய உடைத்த நடிகை சுலக்ஷ்னா!..

80-களில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் முக்கியமான நடிகையாக திகழ்ந்தவர் நடிகை சுலக்ஷ்னா. இவர் இது வரை சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகையாக விளங்குகிறார்.

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக இரண்டு வயதில் அறிமுகம் ஆன நடிகை சுலக்ஷ்னா கதாநாயகியாக மாறி திரை உலகை கலக்கியவர். மேலும் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து அனைவரையும் அசத்தியவர்.

நடிகை சுலக்ஷ்னா..

நடிகை சுலக்ஷ்னா தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடித்து நல்ல ரீச்சை பெற்றிருக்கிறார்.

இவர் தமிழில் தூரல் நின்று போச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர அந்த படங்களில் பக்குவமான தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த இவர் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய பேச்சானது பலரையும் வியப்பில் ஆழ்த்தக் கூடிய வகையில் இருந்தது என்று சொல்லலாம்.

இதற்கு காரணம் இன்றைய காலத்தில் நடிகைகளுக்கு இருக்கக்கூடிய வசதிகள் அவருக்கு இல்லை என்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சில விஷயங்களை ஓபன் ஆக சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்தார்.

பாவிக.. புடவைய நாலா பக்கம் மறச்சும் விடல..

அன்று திரைப்படத்தில் நடித்த நடிகைகளுக்கு உடை மாற்றுவது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருந்தது என்று சொல்லலாம். இன்று இருக்கக்கூடிய கேரவன் வசதி அன்று இல்லாத காரணத்தால் இருக்கின்ற இடத்தில் புடவைய நாலா பக்கமும் மறச்சு புடிச்சுட்டு நிக்க அதற்குள் போய் தான் உடை மாற்ற வேண்டும்.

அதுவும் டிராவல் செய்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு செல்லக் கூடிய நேரங்களில் காருக்கு பின்னால் நின்று கொண்டு உடை மாற்றிய காலங்களும் உண்டு. அந்த சமயங்களில் பல்வேறு இடர்பாடுகளை தான் சந்தித்து இருப்பதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் நடிகை என்பவள் ஒரு பெண் என்பதை மறந்து விட்டு மற்ற பெண்களுக்கு இருக்கக்கூடிய அதே மனநிலை தான் எங்களுக்கும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளாமல் புடவையை நாலா பக்கம் மறைத்து அதுக்குள் சென்று உடை மாற்றும் போதும் நாலு பேர் பார்த்த வண்ணம் இருப்பார்கள்.

இது போன்ற சூழ்நிலையில் நான் உடை மாற்றும் போது மிகவும் சங்கடத்தோடு மாற்றி இருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

பதிம வயசு கன்றாவி..

அத்தோடு இதனைத் தான் தனது பதிம வயசு கன்றாவி என்று உடைத்துப் பேசி இருக்கும் நடிகை சுலக்ஷ்னா சிறுநீர் கழிக்க பாத்ரூம் செல்ல என பல வகைகளில் சூட்டிங் சமயத்தில் கஷ்டப்பட்டு இருக்கும் விவரத்தையும் சொல்லி அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார்.

அந்த சமயத்தில் இப்படி கூச்ச சுபாவத்தோடு இருந்திருந்தால் கட்டாயம் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்க முடியாமல் பல வாய்ப்புகளை இழந்து இருக்க நேரிட்டிருக்கும் என்பதையும் பதிவு செய்து இருக்கிறார்.

அத்தோடு இன்றுயிருக்கும் நடிகைகளுக்கு கிடைத்திருக்கக் கூடிய வசதிகள் ஏதும் அப்போது நடித்த நடிகைகளுக்கு இல்லை என்ற விவரத்தை பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒவ்வொரு நடிகைகளும் படும் சிரமத்தை ஓபன் ஆக சொல்லி இருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் அதிகளவு பேசப்படும் பேசும் பொருளாக மாறி உள்ளதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை அவர்கள் அவர்களோடு ஷேர் செய்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam