திரைத்துறையில் நடக்கும் பாலியல் அத்துமீறல் தொடர்பாக தொடர்ந்து உலக அளவில் குரல்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏற்கனவே முன்பு மீ டு என்கிற ஒரு பிரச்சனை துவங்கியது அப்பொழுது பல சினிமாவில் இருக்கும் நடிகைகள் அவர்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வந்தனர்.
அதில் நிறைய பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டது அந்த சமயத்தில்தான் பாடகி சின்மயி கூட தனக்கு பாடலாசிரியர் வைரமுத்துவால் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேசி இருந்தார். பிறகு அதனால் பாடகி சின்மயிக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போன சம்பவங்களும் நடந்தன.
நடிகையிடம் அத்தீமீறல்
இந்த நிலையில் அதே போன்ற ஒரு பிரச்சனைதான் தற்சமயம் மலையாள சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஹேமா கமிட்டி பிரச்சினையாக உள்ளது. இது மலையாள சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்களை நடத்திய பல பிரபலங்களை அடையாளம் கண்டு இருக்கிறது.
இதனிடையே மலையாளத்தில் பிரபல நடிகரான ஜெயசூர்யா மீதும் பாலியல் குற்றச்சாட்டு அதிகரித்து இருக்கிறது. தொடுபுழாவில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பின் பொழுது ஒரு நடிகைக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது புகார் ஒன்று எழுந்திருக்கிறது.
சிக்கிய பிரபல நடிகர்
இந்த நடிகை படப்பிடிப்பில் இருந்த போதே இவருக்கு அந்த நடிகை மீது ஒரு கண் இருந்ததாக கூறப்படுகிறது. தனிமையில் எப்பொழுது வாய்ப்பு கிடைக்கும் என்று காத்திருந்த ஜெயசூர்யா கழிவறைக்கு சென்று திரும்பும் பொழுது தன்னை தொந்தரவு செய்ததாக அந்த நடிகை குற்றம் சாட்டி இருக்கிறார்.
இதனை அடுத்து அவர் போலீசில் இது குறித்து புகார் அளித்திருக்கிறார் மேலும் கடந்த வியாழக்கிழமை வேறொரு நடிகையும் ஜெயசூர்யா மீது பாலியல் தொல்லை தொடர்பாக குற்றச்சாட்டு ஒன்றை வைத்திருந்தார்.
இவரா இப்படி
இதன் அடிப்படையில் ஏற்கனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இப்படி தொடர்ச்சியாக அவர் மீது எழும் புகார்கள் கேரள சினிமா மத்தியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கேரளா சினிமாவில் இன்னும் எத்தனை நபர்கள் பெண்களிடம் அத்துமீறி நடந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
மேலும் இந்த மாதிரியான ஹேமா கமிட்டி மாதிரியான அமைப்பு இந்திய அளவில் அமைக்கப்படும் பட்சத்தில் எத்தனை பெரிய நடிகர்கள் இதில் சிக்குவார்கள் என்றும் தெரியவில்லை என்று பொதுமக்கள் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.