சிறுவயது ரஜினியாக நடித்த இந்த சிறுவன்.. இப்போது இவரின் நிலை என்ன தெரியுமா?.. அட கொடுமையே..

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டம் துவங்கிய இப்பொழுது வரை சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்று தனக்கான தனி இடத்தை சினிமாவில் பெற்று இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். பெரும்பாலும் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுக்கக் கூடியவை என்பதாலேயே இப்போது வரை மார்க்கெட் அதிகாக இருக்கும் நடிகராக அவர் இருந்து வருகிறார்.

இப்போது இருக்கும் இளம் நடிகர்களுக்கு கூட போட்டி நடிகராக ரஜினிகாந்த் இருப்பது என்பது அவருக்கு அதிக புகழ் சேர்க்கும் விஷயமாக இருந்து வருகிறது. ரஜினிகாந்த் ஆரம்ப காலகட்டங்களில் நடிக்கும் போது நிறைய திரைப்படங்களில் சிறிய வயது ரஜினிகாந்த் கதாபாத்திரம் என்று ஒன்று இருக்கும்.

சிறுவயதி ரஜினி:

படிக்காதவன் போன்ற பல திரைப்படங்களில் இப்படியான ஒரு கதாபாத்திரத்தை பார்க்க முடியும். இந்த கதாபாத்திரத்தில் ஒரு சிறுவன் நடித்திருப்பார். அந்த சிறுவனின் நடிப்பு கிட்டத்தட்ட ரஜினியை போலவே இருக்கும்.

ரஜினியை போலவே தலையை கோதி ஸ்டைலாக நடிக்கும் அந்த நடிகர்தான் மாஸ்டர் சுரேஷ். இவருக்கு சூர்யா கிரண் என்று இன்னொரு பெயரும் உண்டு. மாஸ்டர் சுரேஷை பொருத்தவரை சிறுவயதிலேயே சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக இருந்தவர்.

மாஸ்டர் சுரேஷ்:

ரஜினிகாந்த் நடித்த நிறைய திரைப்படங்களில் இவர் சிறு வயது ரஜினிகாந்தாக நடித்திருக்கிறார். அதற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்தை போலவே ஸ்டைலாக இவர் நடிக்க கூடியவர் என்பதாலேயே இவருக்கு வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது.

அதற்குப் பிறகு விஜயகாந்த், சரத்குமார் போன்ற நிறைய நடிகர்களின் சிறுவயது கதாபாத்திரங்களில் இவர் நடிக்க துவங்கினார். இவரது புகழ் பாலிவுட் வரை சென்று அப்பொழுது அமிதாப்பச்சனுக்கு சிறுவயது கதாபாத்திரமாக இவர் நடித்தார்.

இப்போதைய நிலை என்ன?

அந்த அளவிற்கு பிரபலமான  சுரேஷ் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறியாத விஷயம் . தற்சமயம் திரைப்படங்களுக்கு வசனங்கள், திரைக்கதைகள் எழுதுவதை வேலையாக கொண்டிருந்தார் மாஸ்டர் சுரேஷ்.

சிறுவயதிலேயே இவர் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து சாதனை படைத்திருக்கிறார். சமுத்திரம் மாதிரியான ஒரு சில திரைப்படங்களில் நடித்த நடிகை காவேரியைதான் இவர் திருமணம் செய்து கொண்டார். மேலும் சீரியல்களில் நடித்து வரும் நடிகை சுஜிதா இவரின் சகோதரி ஆவார்.

தொடர்ந்து சினிமாவில் பயணித்து வந்த மாஸ்டர் சுரேஷ் 49 ஆவது வயதில் கடந்த மார்ச் 12 அன்று இயற்கை எய்தினார். மஞ்சள் காமாலையால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் சிறு வயதில் தமிழ் சினிமாவில் நடிக்கும் பெரும்பான்மையான நடிகர்கள் பிறகு வளர்ந்த பிறகு சினிமாவில் காணாமல் போய்விடுவது உண்டு. உதாரணத்திற்கு பிரெண்ட்ஸ் திரைப்படத்தில் விஜய்க்கு சிறுவயது விஜய்யாக நடித்த அந்த சிறுவன் இப்பொழுது சினிமா துறையில் இல்லை.

அப்படியெல்லாம் இருக்கும் பொழுது மாஸ்டர் சுரேஷ் மட்டும் இவ்வளவு காலங்களாகியும் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து கடைசி காலம் வரை தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam