தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளாக இருந்தும் கூட துயரமான வாழ்க்கைகளை வாழ்ந்த ஒரு சில நடிகைகளில் சாந்தி வில்லியம்ஸ் முக்கியமானவர் ஆவார்.
அவரது சொந்த வாழ்க்கை என்பது மிகவும் கொடூரமானதாக இருந்தது. இருந்தாலும் கூட மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் சாந்தி வில்லியம்ஸ். அதே சமயம் சீரியல்களில் தொடர்ந்து அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இவர் இருந்து வருகிறார்.
சாந்தி வில்லியம்ஸ்
முக்கியமாக மெட்டி ஒலி சீரியலில் இவர் நடித்த ராஜம் என்கிற கதாபாத்திரம் இவரது மார்க்கெட்டை வேற அளவில் உயர்த்தியது. இப்பொழுது வரை சீரியல்களில் இவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். இப்போதும் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் புது வசந்தம் சீரியலில் இவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பல முக்கியமான தகவல்களை கூறியிருக்கிறார் சாந்தி வில்லியம்ஸ். அதில் அவர் மோகன்லால் குறித்து கூறும்பொழுது மோகன்லால் ஒரு நன்றி மறந்த மனிதன் என்று கூறுகிறார். நானும் எனது கணவரும் மோகன்லாலை வைத்து நான்கு திரைப்படங்களை தயாரித்தோம்.
மோகன்லால் நடித்த இரண்டாவது திரைப்படத்தில் அவர் வில்லனாக நடித்தார். அந்த திரைப்படத்தை எனது கணவர்தான் தயாரித்தார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பூர்ணிமா பாக்யராஜ் நடித்திருந்தார். நடிகை ஊர்வசி இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மோகன்லால் என்ன பார்த்து ஓடுனான்..
அந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கும் எனது கணவருக்கும் அதிகமான நட்பு இருந்து வந்தது. தினசரி எங்கள் வீட்டிற்கு வந்து மீன் குழம்பு கேட்டு வாங்கி செல்வார் மோகன்லால். அந்த நான்கு படங்களை தயாரித்த பொழுது ஒரு கட்டத்தில் பணம் இல்லாமல் போனபோது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நான் எனது நகையை அடகு வைத்து மோகன்லாலுக்கு கொடுக்க வேண்டிய 60,000 சம்பளத்தை கொடுத்தேன்.
அந்த அளவிற்கு எப்போதும் மோகன்லால் என்று கூறிக் கொண்டிருந்த என் கணவனின் சாவுக்கு மோகன்லால் வரவில்லை. ஊரே அவனை சிறந்த நடிகர் என்று கூறலாம். ஆனால் அவனை எனக்கு பிடிக்காது. ஒரு முறை விமான நிலையத்தில் என்னை பார்த்து தலைதெறிக்க ஓடினான் மோகன்லால் என்று கூறுகிறார் சாந்தி வில்லியம்.
வாழ்க்கையை அழிச்சவன் பாலு மகேந்திரா
மேலும் அவர் நடிகை ஷோபா குறித்து கூறும் பொழுது. ஒரு திரைப்படத்தில் ஷோபா எனக்கு தங்கையாக நடித்தார். அப்போது முதலே அவளுக்கும் எனக்கும் நல்ல பழக்கம் உண்டு. அந்த படத்தில் நடிக்கும் போது எனக்கே 12 வயது தான் இருக்கும்.
அப்படி என்றால் ஷோபாவிற்கு எத்தனை வயது இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அந்த நட்பு வெகு காலங்களாகவே இருந்து வந்தது. மூடுபனி என்கிற திரைப்படத்தில் ஷோபா நடிக்கும் போது அவள் தற்கொலை செய்து கொண்ட போது அணிந்திருந்த அதே புடவையுடன் அவளை பார்த்தேன்.
அதற்குப் பிறகு அவள் இறந்துவிட்டாள் என்று கூறியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒருவருக்கு நல்ல வாழ்வை அளிக்க வேண்டுமே தவிர நன்றாக இருக்கும் வாழ்க்கையை கெடுக்க கூடாது. அந்த வகையில் பாலு மகேந்திராவை எனக்கு சுத்தமாக பிடிக்காது. அவன் எனக்கு எதிரே வந்தால் கூட நான் அவனை கண்டுகொள்ளாமல் சென்று விடுவேன் என்று பாலு மகேந்திராவையும் விமர்சித்து இருக்கிறார் சாந்தி வில்லியம்ஸ்.