தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பை பெற்ற பிரபலங்கமாக இருப்பவர்களில் முக்கியமானவர் ஆர்.சுந்தர்ராஜனை உன்னை நினைத்து, திருமதி பழனிச்சாமி மாதிரியான நிறைய திரைப்படங்களில் காமெடி நடிகராக மக்கள் பார்த்திருப்பார்கள்.
அதன் மூலமாக தான் அவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகிறார். ஆனால் அதை எல்லாம் தாண்டி ஒரு இயக்குனராக 26 வெற்றி படங்களை கொடுத்தவர் சுந்தர்ராஜன். சுந்தர்ராஜன் இயக்கிய பயணங்கள் முடிவதில்லை, நான் பாடும் பாடல், ராஜாதி ராஜா மாதிரியான நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்திருக்கின்றன.
அதுனாலதான் பிரச்சனை
இந்த நிலையில் சுந்தர் ராஜன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது எம்.ஜி.ஆர் காலகட்டங்களில் தொடர்ந்து எம்.ஜி.ஆர் தன்னை இளமையாக காட்டிக் கொள்வதற்காக புது புது நடிகைகளுடன் சேர்ந்து நடித்து வருவார். அதே மாதிரி இப்பொழுது இருக்கும் நடிகர்கள் இளம் இயக்குனர்களுடன் சேர்ந்து நடித்து வருகின்றனர்.
ஆனால் அவர்களை எல்லாம் தூக்கிவிட்ட பாக்கியராஜ் மாதிரியான பெரிய இயக்குனர்களை அவர்கள் மறந்துவிட்டனர். இந்தியாவிலேயே சிறந்த திரைக்கதை எழுதுபவர் என்று போற்றப்பட்டவர் பாக்யராஜ். அவரை இந்த தமிழ் சினிமா இப்படி கை கழுவி விட்டது தவறு.
கேட்டால் பாக்யராஜ் பழைய இயக்குனர் என்று கூறுகின்றனர். அப்படி என்றால் பாக்யராஜுக்கு முன்பே சினிமாவில் அறிமுகமான ரஜினிகாந்த்தும் கமல்ஹாசனும் பழமையானவர்கள் இல்லையா? இப்படி இந்த நடிகர்கள் பாக்கியராஜ் கைவிட்டதில் எனக்கு கோபம் உண்டு.
விஜயகாந்தை வைத்து செய்த சம்பவம்
நான் விஜயகாந்தை வைத்து வைதேகி காத்திருந்தாள் என் ஆசை மச்சான், அம்மன் கோவில் கிழக்காலே போன்ற வெற்றி படங்களை கொடுத்திருக்கிறேன். அதேபோல மோகனுக்கு பயணங்கள் முடிவதில்லை நான் பாடும் பாடல், மெல்ல திறந்தது கதவு மாதிரியான படங்களை கொடுத்திருக்கிறேன்.
ஒருமுறை மோகன் என்னிடம் பேசும் பொழுது நீங்கள் சத்தியராஜ் ரஜினிகாந்த் விஜயகாந்த் மாதிரியான நடிகர்களுக்கு எல்லாம் சண்டை காட்சிகள் வைக்கிறீர்கள். என் படத்தில் மட்டும் சண்டை காட்சிகளே இல்லை என்று கோபித்துக் கொண்டார்.
அப்போதுதான் நான் கூறினேன். அதெல்லாம் ரஜினிவிஜயகாந்துக்கு ஒர்க் அவுட் ஆகும். உங்களுக்கு ஒர்க்கவுட் ஆகாது என்று கூறினேன். விஜயகாந்தை வைத்து நான் இயக்கிய படங்களின் வெற்றிக்கு இளையராஜாவும் முக்கிய காரணமாவார்.
மனம் திறந்த ஆர். சுந்தர்ராஜன்
அதேபோல நான் எடுத்த நான் பாடும் பாடல் என்கிற படத்தின் கதை ஒரு உண்மை கதை ஆகும். ஒரு பாடகியை பார்த்து அவருக்கு ரசிகனான ரசிகர் ஒருவர் தொடர்ந்து அந்த பாடகியின் அனைத்து விழாக்களுக்கும் சென்று கொண்டிருந்தார்.
அதன் மூலமாக அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிறகு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அந்த நடிகைக்கு முதன் முதலாக சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்த பொழுது அதனை பார்ப்பதற்காக டெல்லியில் இருந்து அவசர அவசரமாக கிளம்பி வந்தார் அந்த கணவர்.
ஆனால் வரும் வழியிலேயே விபத்துக்குள்ளாகி அவர் இறந்துவிட்டார் இதனை அடிப்படையாகக் கொண்டு நான் எடுத்த படம் தான் நான் பாடும் பாடல் என்கிறார் சுந்தர்ராஜன்.
இப்போது இருக்கும் நடிகர்களை பார்க்கும்பொழுது அதிலிருந்து எம்.ஜி.ஆர் எவ்வளவு வித்தியாசமானவர் என்பது எனக்கு தெரிகிறது. ஏனெனில் இப்போது இருக்கும் நடிகர்கள் எல்லாம் தவறு செய்பவர்களை இவர்களே கொலை செய்து விட்டு சென்று விடுகின்றனர். ஆனால் எம்.ஜி.ஆரை பொருத்தவரை எந்த ஒரு திரைப்படத்திலும் சட்டத்தை அவர் கையில் எடுக்க மாட்டார். கெட்டவர்களை பிடித்து போலீசாரிடம் தான் ஒப்படைப்பார் என்று கூறியிருக்கிறார் சுந்தர்ராஜன்.