தளுக் மொழுக்குன்னு ததும்பலா தெரியும் அந்த அழகு – நித்யா மேனனுக்கு பிச்சி உதறும் லைக்ஸ்!

நேச்சுரல் அழகியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் நடிகை நித்யா மேனன்.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த இவர் திரைப்பட நடிகையாகவும் பின்னணி பாடகியாகவும் இருந்து வருகிறார்.

நடிகை நித்யா மேனன்:

தென்னிந்திய திரைப்படத்துறையில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பிரபலமான ஹீரோயின் ஆக மக்கள் மனதில் இடத்தை பிடித்து நம்பர் ஒன் லிஸ்டில் இடத்தை பிடித்து இருக்கிறார்.

இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நித்யா மேனன் பெங்களூரில் ஒரு மலையாள குடும்பத்தில் பிறந்த நடிகையாக பார்க்கப்படுகிறார்.

இவர் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் இதழில் படித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பத்திரிகையாளராக தான் இருக்க விரும்பியதாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார் நித்தியா மேனன்.

ஆனால், பத்திரிகை துறையில் இருந்த விருப்பம் குறைந்த பிறகு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவாளர் படிப்பை முடித்திருக்கிறார்.

இவரது தந்தை கோழிக்கோட்டையும் தாயார் பாலக்காட்டையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே திரைப்படத்துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்த நித்தியா மேனன் திரைப்படத்தில் நடிகையாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் படங்களில் நித்யா மேனன்:

பின்னர் 180 என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் சித்தார்த் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

தொடர்ந்து வெப்பம், ஓர் காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா , 24 , இருமுகன் ,சைக்கோ, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அண்மையில் தான் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்று கவுரவிக்கப்பட்டார்.

நடிகை நித்யா மேனனுக்கு தேசிய விருது கொடுக்கப்பட்டதை பலரும் விமர்சித்து தள்ளிருந்தார்கள்.

அவரை விட கார்க்கி திரைப்படத்தில் சாய் பல்லவி சிறப்பாக நடித்திருப்பதாக கூறி அவருக்கு தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும் என சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய விமர்சனமே எழுந்து வந்தது.

தளுக் மொழுக்குன்னு இருக்கும் அந்த அழகு:

அதற்கெல்லாம் நடிகை நித்யா மேனன் பதிலடி கொடுத்த விவகாரமும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக தனது அழகழகான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.

அந்தவகையில் தற்போது சிம்பிளான சல்வார் அணிந்துக்கொண்டு செம அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

தளுக் மொழுக் தோற்றத்தில் மற்ற ஹீரோயின்களை விட கொஞ்சம் வித்தியாசமான காணப்படும் நித்யா மேனனின் இந்த அழகை ரசிகர்கள் ரசித்து வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam