தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் கஞ்சா கருப்பு. பெரும்பாலும் சாதாரணமாக காமெடிகள் செய்யும் காமெடி நடிகர்கள் சினிமாவில் வெகு காலங்கள் இருப்பதில்லை. அதனை தாண்டி காமெடியில் புதிதாக ஏதாவது ஒன்றை செய்ய தெரிந்தவர்கள் தான் பல காலங்கள் சினிமாவில் இருக்க முடிகிறது.
அப்படியாக தனித்துவமான ஒரு காமெடி நடிகராக கஞ்சா கருப்பு இருந்தார். அவர் பேசும் கிராமத்து பாணியிலான பேச்சை தமிழ் சினிமாவில் உள்ள எல்லா காமெடி நடிகர்களாலும் பேச முடியாது. எனவே கிராமம் சார்ந்த திரைப்படங்கள் எடுத்தாலே அதில் கஞ்சா கருப்பு இருக்க வேண்டும் என்கிற நிலை வந்தது.
என் காசுல அதை பண்ணுவான்
அந்த அளவிற்கு அவருடைய காமெடிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. ராம், பருத்திவீரன், களவாணி போன்ற திரைப்படங்களில் கஞ்சா கருப்பு செய்திருக்கும் நகைச்சுவைகள் எல்லாம் பட்டி தொட்டி எங்கும் பேசப்பட்டன என்று கூறலாம்.
அப்படி ஒரு காலத்தில் மிக பெரும் காமெடி நடிகராக இருந்த கஞ்சா கருப்பு பிறகு கொஞ்ச காலங்களிலேயே காணாமல் போய்விட்டார். இப்பொழுது அவருக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகளும் வரவேற்புகளும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கஞ்சா கருப்பு தன்னுடைய தற்போதைய நிலை என்ன என்பதை வெளிப்படையாகவே கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது ஒரு திரைப்படத்தை தயாரித்ததன் மூலமாக வாழ்க்கையில் மிகப்பெரிய அடியை வாங்கி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் கஞ்சா கருப்பு.
ஸ்கூல் ஃபீஸ் கட்டல
அவர் தயாரித்த திரைப்படம் வேல்முருகன் போர்வெல்ஸ் இந்த திரைப்படத்தில் அங்காடித்தெரு படத்தில் கதாநாயகனாக நடித்த மகேஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். கோபி எம்பி என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இது குறித்து பேசிய கஞ்சா கருப்பு கூறும் பொழுது எனக்கு வந்த இயக்குனரும் சரி கிடையாது, நடிகரும் சரி கிடையாது அதனால் அந்த படமும் ஓடாமல் போய்விட்டது. என்னுடைய தவறுதான் அந்த திரைப்படம் உருவானது என்பதை அப்பொழுதே நான் தெரிந்து கொண்டேன் அதனால் பெரிய நஷ்டத்தையும் கண்டேன்.
வடிவேலுவை விமர்சித்த கஞ்சா கருப்பு
அந்த படத்தின் இயக்குனர் என்னுடைய பணத்தை வைத்து சீட்டு எல்லாம் ஆடி இருக்கிறான். இப்பொழுது பொருளாதார ரீதியாக மிகப் பெரும் கஷ்டத்தில் இருக்கிறேன். என்னுடைய பிள்ளைக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியவில்லை அந்த ஸ்கூலில் சொல்லி அனுப்பி விட்டார்கள் என்று என்னிடம் எனது பிள்ளைகள் கூறுகின்றனர். நான் இன்னும் இரண்டு நாட்கள் அவர்களிடம் டைம் கேட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்று கூறுகிறார் கஞ்சா கருப்பு.
வடிவேலு மாதிரியான நடிகர்கள் உங்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்வது கிடையாதா? என்று கேட்ட பொழுது வடிவேலு உண்மையில் நல்லவர் அவர் யாருக்கும் உதவி செய்யாததுனால தான் நல்லவராக இருக்கிறார். இன்னமும் அவர் சினிமாவில் இருக்க முடிகிறது என்னை மாதிரி எல்லோருக்கும் உதவி செய்கிறேன் என்று இறங்கி இருந்தால் அவரது நிலையும் மோசமானதாக மாறி இருக்கும் என்று கூறியிருக்கிறார் கஞ்சா கருப்பு.