தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக ஜெயம் ரவி இருந்து வருகிறார் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கும் இடையே விவாகரத்து நடக்கப்போகிறது என்பது பல நாட்களாகவே பேசி வரும் சர்ச்சையாக இருந்து வருகிறது.
ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் இடையே வெகு நாட்களாகவே சண்டைகள் இருந்ததாகவும் அதனால் அவர்கள் பேசிக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை அடுத்து இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது சில நாட்களாக சர்ச்சையாக இருந்து வந்தது.
அதில் பலர் கூறும் பொழுது ஆர்த்தியின் தாயார்தான் ஜெயம் ரவியின் திரைப்படங்களை தயாரித்து வந்தார். ஆனால் சமீபத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் அனைத்தும் பெரிய தோல்வியை கண்டன. இதனால் அடுத்து ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் சம்பளத்தை குறைத்தார் ஜெயம் ரவியின் மாமியார்.
இதுதான் காரணம்
அதனால் கோபம் கொண்ட ஜெயம் ரவி அவரது மாமியாருடன் சண்டை போட துவங்கினார். இதனால் அவரது மனைவிக்கும் அவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அதுதான் விவாகரத்துக்கு காரணம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.
ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஏதோ ஒரு பெண்ணோடு தொடர்புடன் இருந்ததாக ஒரு சர்ச்சை பேச்சு இருந்தது. அதேபோல ஆர்த்தியும் தமிழ் சினிமாவில் உள்ள பிரபல நடிகருடன் தொடர்பில் இருந்தார் என்றெல்லாம் வதந்திகளை பரப்பி வந்தனர்.
இந்த நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமீபத்தில் ஜெயம் ரவி தனது விவாகரத்தை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களை கொண்ட ஒரு பயணம் என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும் திரை அல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரைத்துறை நண்பர்கள், பத்திரிகை ஊடகத்துறை மற்றும் சமூக ஊடக நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.
பகீரங்கமாக அறிவித்த ஜெயம் ரவி
நீண்டகால யோசனை மற்றும் பரிசீலனைக்கு பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டது அல்ல என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்வுக்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனி உரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனி உரிமைகளுக்கும் மதிப்பு அளிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் இந்த முடிவு எனது சொந்த முடிவாகும் இது எனது தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி.
சுற்றி உள்ளவர்களின் நலனுக்காக பிரிகிறோம் என ஜெயம் ரவி எதை குறிப்பிடுகிறார் என்பதே இப்போது கேள்வியாக உள்ளது.