பெரும்பாலும் அனைத்து பிரபலங்களும் நிறைய பணம் சம்பாதிக்க ஆசைப்படுவதற்கு முக்கிய காரணமே நல்லபடியான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதற்காகதான். இது எல்லா மனிதர்களுக்கும் இருக்கக்கூடிய ஆசைதான்.
ஆனால் சிலருக்கு பணம் கிடைத்தாலும் அப்படியான வாழ்க்கை அமைந்து விடுவது கிடையாது. அப்படியாக வாழ்க்கையில் நிறைய சோதனைகளை அனுபவித்து தற்சமயம் தனிமரமாக வாழ்ந்து வருபவர் நடிகை ஜெயக்குமாரி.
1960களில் தமிழ் தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளிலும் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்தவர் ஜெயக்குமாரி. தமிழில் முதன் முதலில் 1966 இல் வெளிவந்த நாடோடி என்கிற திரைப்படத்தில் இவர் நடித்தார்.
மோசமான அழைப்புகள்
அதன் மூலமாக நிறைய வரவேற்பு பெற்ற ஜெயக்குமாருக்கு 1970 இல் இருந்து தமிழில் நிறைய திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தமிழில் முன்னணி நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என்று பலரோடும் இணைந்து நடித்திருக்கிறார் ஜெயக்குமார்.
ஆனால் அவருடைய வாழ்க்கை இப்பொழுது சுமூகமாக இல்லை. அது குறித்து அவரே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது நான் சினிமாவில் 400க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது தனியாக இருந்து வருகிறேன். நடிகையாக நான் இருந்த காலத்தில் அப்துல்லா என்பவரை நான் காதலித்து வந்தேன்.
குழந்தை கடத்தல் வரை
ஹைதராபாத்தில் நடந்த ஒரு பிரபலங்களுக்கான மீட்டிங்கில் அவரை நான் சந்தித்தேன். எங்களுக்கிடையே காதல் ஏற்பட்டது. நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். அதற்குப் பிறகும் நான் நடித்துக் கொண்டுதான் இருந்தேன்.
நான் கவர்ச்சி பாடல்களில் நடிப்பதால் அதை சிலர் தவறாக புரிந்து கொண்டு எனக்கு போன் செய்து தவறாக பேசுவார்கள். அந்த மாதிரி பேசுபவர்களை போலீசில் பிடித்து கொடுத்து விடுவேன் என்று எச்சரிக்கை செய்வேன்.
அதற்கு பிறகு அவர்கள் திரும்ப போன் செய்ய மாட்டார்கள். நிறைய பணம் சம்பாதித்த பிறகு எனது கணவர் ஒரு திரைப்படம் தயாரிக்கலாம் என்று கூறினார். நான் எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை. சரி என்று ஒரு திரைப்படத்தை தயாரித்தோம்.
பிரபல நடிகையின் வாழ்க்கை
அந்த திரைப்படம் பெரிய தோல்வியை கொடுத்தது அதனால் கடனிலும் நாங்கள் சீக்கி கொண்டோம். கடன்காரர்கள் நிறைய பிரச்சனைகளை கொடுத்தார்கள். எங்கள் குழந்தைகளை கடத்தி விடுவதாக மிரட்டினார்கள் அதேபோல சில நாட்கள் எங்கள் குழந்தைகள் காணாமலும் போனார்கள்.
இப்படியான நிறைய பிரச்சனைகளை சந்தித்த பிறகு ஒரு வழியாக எப்படியோ கடனை எல்லாம் அடைத்து முடித்தோம். ஆனால் எனது பிள்ளைகளுக்கு திருமணம் ஆனபோது அவர்களது மருமகள் என்னோடு சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை என்று கூறிவிட்டனர். அதனால் நான் தனியாக வந்துவிட்டேன். நானும் கணவரும் மட்டும் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். அவரும் இறந்து விட்டதால் இப்பொழுது நான் தனித்து இருந்து வருகிறேன் என்று தன்னுடைய சோக கதையை பகிர்ந்திருக்கிறார் ஜெயக்குமாரி.