சீரியலே வேண்டாம்.. விட்டிடுங்க தலை தெரித்து ஓடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா..

தற்போது இல்லத்தரசிகளின் மத்தியில் மட்டுமல்லாமல் வெகுஜன மத்தியிலும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டாம்.

இந்த சீரியலில் அமிர்தா கேரக்டரில் நடித்து வரும் நடிகை ரித்திகா சீரியலில் இருந்து விலகி விட்டார். இந்நிலையில் அவர் ஏன் இந்த சீரியலை விட்டு விலகினார் என்பது புரியாத புதிராக இருந்தது.

சீரியல் நடிகை ரித்திகா..

சீரியலில் நடிக்கும் ரித்திகா பார்ப்பதற்கு நம் பக்கத்து வீட்டு பெண் போல பழக்கப்பட்ட தோற்றத்தோடு இருப்பதால் இவரை பார்த்தாலே அனைவரும் விரும்பக் கூடிய வகையில் இருப்பது இவருக்கு ஒரு பிளஸ் ஆகும்.

இவர் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பலரையும் தன் பக்கம் ஈர்த்தார். மேலும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் பல ரியாலிட்டி ஷோக்கலில் பாட்டு பாடி அசத்தி பலரது கவனத்தை தன் பக்கம் திருப்பி இருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் தான் முதலில் அறிமுகமானார்.

சீரியலே வேண்டாம்.. விட்டிடுங்க.‌.

ராஜா ராணி சீரியலுக்குப் பிறகு பாக்யலட்சுமி சீரியலில் நடித்திருக்கிறார். இந்த சீரியலில் பலரது மனதையும் கவரக்கூடிய வகையில் இவரது நடிப்பு இருந்தது. எப்போதும் சத்தமாக பேசாத கேரக்டரில் ரித்திகா மிகச் சிறப்பான நடிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருந்தார்.

மேலும் தன் கணவர் தன் கண்முன்னே இறந்து விட குழந்தைகளோடு கணவரின் பெற்றோரோடு வாழக்கூடிய வகையில் காட்சி அமைப்பில் இருந்தது. இதனை அடுத்து இவர் எழிலை காதலித்து இருப்பார். அதன் பிறகு ஏற்படும் போராட்டங்களிலும் தனது நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

மேலும் குக் வித் கோமாளியில் இவர் பங்கேற்று இருந்த போது அதில் பங்கேற்று இருந்த சக போட்டியாளரான பாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்திருந்தது.

தலை தெரித்து ஓடிய பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா..

இந்நிலையில் அந்த கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் இருந்த வினு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பாக்யலக்ஷ்மி சீரியலில் தொடர்ந்து நடித்தார்.

இதனை அடுத்து அந்த சீரியலில் நடிப்பதில் இருந்து திடீரென விலகியதை அடுத்து இதற்கான காரணம் என்ன என்று பலரும் பல்வேறு வகைகளில் யோசித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் அவர் தற்போது ஒரு திரைப்படத்திலும் நடித்த வருகிறார். அதே நேரத்தில் நிறைமாத கர்ப்பமாக ரித்திகா இருப்பதால் தான் சீரியல் மற்றும் சினிமாவை விட்டு விலகியதாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. இதை தொடர்ந்து தான் இவர் சீரியலில் நடிப்பதில்லையா என்ற கேள்விக்கு பதிலாகவும் அமைந்துவிட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam