நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி இந்த திரைப்படம் ஹிந்தியில் வெளியான ஆர்டிகல் 15 என்ற படத்தின் ரீமேக் ஆகும்.
இந்த படத்தை கனா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்கம் இயக்கியுள்ளார். படத்தை வலிமை நேர்கொண்ட பார்வை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர் தயாரித்துள்ளார்.
ஒரு உண்மை நிகழ்வை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை பெற்றிருக்கின்றது.
இந்நிலையில் தமிழகத்தின் முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் தனது மகன் நடித்துள்ள “நெஞ்சுக்கு நீதி” படத்தை இன்று பார்த்தார்.
படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் படக்குழு என அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு படத்தில் நான் புதிய உதயநிதியை பார்த்தேன் என்று இயக்குனரிடம் கூறியுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.