தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற காமெடி நடிகர்களில் வடிவேலுவை போலவே மிக முக்கியமானவர் கவுண்டமணி. கவுண்டமணி இருந்த சமகால கட்டத்தில் அவருக்கு இணையான ஒரு காமெடி நடிகர் இல்லை என்று கூறலாம்.
அந்த அளவிற்கு நடிகர்களுடன் சேர்ந்து நிறைய காமெடிகளை அவர் செய்திருக்கிறார். பெரும்பாலும் திரைப்படங்களில் காமெடி நடிகர்களுக்கு தனியாக காமெடி காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். ஆனால் கவுண்டமணியை பொறுத்தவரை அவர் நடிக்கும் திரைப்படங்களில் கதாநாயகர்களோடு சேர்ந்தே எப்பொழுதும் கவுண்டமணிக்கு காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும்.
ரஜினி அதை உடைச்சுக்கிட்டார்
கவுண்டமணி சேர்ந்து நடித்த கதாநாயகர்களில் சத்யராஜ் ரஜினிகாந்த் மாதிரியான நிறைய நடிகர்களுடன் சிறப்பாக காம்போ போட்டு நடித்திருக்கிறார் கவுண்டமணி. அப்படியாக மன்னன் திரைப்படத்தில் அவர் நடித்தது குறித்து சமீபத்தில் இயக்குனர் பி.வாசு தனது பேட்டியில் கூறியிருந்தார்.
அதில் அவர் கூறும் பொழுது கவுண்டமணி ஒவ்வொரு காட்சியிலும் நடிக்கும் பொழுது அந்த காட்சியை அவருக்கு பிடித்த மாதிரி மாற்றிவிடுவார். நாங்கள் என்ன எழுதி கொடுத்தோமோ அதை அந்த காட்சியில் பேச மாட்டார்.
கவுண்டமணியால் நடந்த சம்பவம்
அதை மேலும் நகைச்சுவையாக மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பார். அதற்கு ஏற்ற மாதிரி அந்த காட்சியையும் மாற்றி விடுவார், உதாரணத்திற்கு மன்னன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் சினிமா கொட்டகையில் கதாநாயகி இவர்களுக்கு தங்கம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி ஒன்று நடக்கும்.
அந்த நிகழ்ச்சியை நான் எழுதியிருந்த விதம் வேறு வகையாக இருந்தது ஆனால் அதைவிட நகைச்சுவையாக அந்த காட்சியை கவுண்டமணி மாற்றி இருந்தார். அதில் போதாத குறைக்கு ரஜினியும் சில விஷயங்களை செய்திருந்தார்.
படப்பிடிப்பில் பரபரப்பு
படத்தில் அந்த காட்சியில் ரஜினி ஒரு பக்க கண்ணாடியை உடைத்து கொண்டு வந்து நிற்பது போன்ற காட்சி இருக்கும். ஆனால் உண்மையில் அதை நான் அவருக்கு சொல்லியே தரவில்லை. அந்த கட்சியில் நடிக்கும் போது அதை ரஜினியே செய்தார்.
இப்படி ரஜினியும் கவுண்டமணியும் சேர்ந்து மன்னன் திரைப்படத்தில் நிறைய காட்சிகளை சிறப்பான காட்சிகளாக மாற்றி இருந்தனர். இந்த படத்தில் மட்டுமல்லாமல் நடிகன் திரைப்படத்திலும் கவுண்டமணி இதேபோல நிறைய காட்சிகளை மாற்றி அமைத்தார் அந்த காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது என்று கூறியிருக்கிறார் இயக்குனர் பி வாசு.