தமிழ் சினிமாவில் தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகராக அனைவராலும் அறியப்படுபவர் நடிகர் விஜய். கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக விஜய் இருப்பதாக கூறப்படுகிறது.
அவருக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் இருக்கும் ரஜினி, கமல் மாதிரியான நடிகர்களே அவரைவிட குறைவான சம்பளம்தான் வாங்குகின்றனர். அப்படி இருக்கும் பொழுது விஜய் இப்படியான உயரத்தை தொட்டியிருப்பது சாதாரண விஷயம் கிடையாது என்று கூறப்படுகிறது.
5 வருடம் கெஞ்சிய விஜய்
இதற்கு நடுவே விஜய் அரசியலுக்கு செல்ல இருப்பதால் தற்சமயம் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். கடைசியாக ஹெச் வினோத் இயக்கத்தில் தன்னுடைய 69 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு மொத்தமாக இவர் சினிமாவில் இருந்து விலகி விடுவார் என கூறப்படுகிறது. இது விஜய் ரசிகர்களுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அரசியல் களத்தில் விஜய் என்ன செய்யப் போகிறார் என்பது ரசிகர்களுக்கு ஆவலையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கடைசி வரை ஆசை நிறைவேறல
இந்த நிலையில் விஜய் இந்த குறுகிய காலகட்டங்களில் நிறைய திரைப்படங்களை தவறவிட்டிருக்கிறார். அப்படியாக ஒரு சிறப்பான திரைப்படத்தை அவர் தவறவிட்ட நிகழ்வை இயக்குனர் பி.வாசு ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
பி வாசு இயக்கத்தில் நிறைய திரைப்படங்கள் தமிழில் வெற்றியை கொடுத்திருக்கின்றன. அதில் விஜய்க்கு மிகவும் பிடித்த திரைப்படம் நடிகன் திரைப்படம் என்று கூறுகிறார் பி வாசு. அந்த திரைப்படத்தை பார்த்த விஜய் அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார்.
அட கொடுமையே
அதில் விஜய்யை கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டிருக்கிறார். இந்த விஷயத்தை அவர் இயக்குனர் பி.வாசுவிடம் கூறியிருக்கிறார் பிறகு பார்க்கலாம் என்று கூறி இருக்கிறார். அதற்கு பிறகு பி.வாசுவிற்கு நிறைய பட வேலைகள் இருந்ததால் இந்த விஷயத்தை கண்டு கொள்ளவில்லை.
இருந்தாலும் கூட ஐந்து வருடங்களாக தொடர்ந்து விஜய் இந்த படத்தை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்துள்ளார். பி.வாசுவிடம் மட்டுமன்றி சத்யராஜ் மற்றும் கவுண்டமணியிடமும் இது குறித்து பேசி இருக்கிறார் விஜய்.
ஆனால் சரியான காலகட்டம் அமையாத காரணத்தினால் விஜயை வைத்து அந்த திரைப்படத்தை இயக்க முடியவில்லை இப்பொழுது நான் விஜய்யை வைத்து அந்த படத்தை இயக்க ஆசைப்படுகிறேன். ஆனால் அவர் அரசியலுக்கு செல்ல இருப்பதால் இப்பொழுது வந்து நடிக்க மாட்டார் என்று பி. வாசு அந்த விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.