தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே தனுஷ் ஐஸ்வர்யா இவர்களை அடுத்து ஜிவி பிரகாஷ் சைந்தவி வரிசையில் தற்போது ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடிகள் இடம் பிடித்து விட்டார்கள்.
ஆனால் இந்த விவாகரத்தில் இருவரும் மனம் ஒத்து விவாகரத்து செய்வதாக தெரியவில்லை. ஜெயம் ரவி தனது தனிப்பட்ட விவாகரத்து முடிவை வெளியிட்டதை அடுத்து ஆர்த்தி தன்னை கலந்து ஆலோசிக்காமல் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும் தனக்கு அதில் விருப்பம் இல்லை என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மனைவிக்கு துரோகம் பாடகியுடன்?
இந்நிலையில் ஜெயம் ரவி திடீர் என்று இந்த முடிவுக்கு வர காரணம் என்ன என்று பலரும் பல்வேறு வகைகளில் செய்திகளை சொல்லி இருந்த நிலையில் தற்போது பிரபலம் ஒருவர் கூறிய விஷயமானது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திருமணத்திற்கு முன்பே ஆர்த்தி பல வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல் இரவு பார்ட்டிகளிலும் பப்புகளிலும் அதிக அளவு நேரத்தை கழித்திருக்கிறார்.
தற்போது மார்க்கெட்டை இல்லாமல் தவித்து வரும் ஜெயம் ரவி எடுப்பார் கை பிள்ளையாக மாறிவிட்டார். தனி ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் திரைப்படம் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை.
ஆர்த்தியின் குடும்பம் பல திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல் தயாரிப்பிலும் அவரது அம்மாவுக்கு மிக நல்ல அனுபவம் உள்ளது. இதனை அடுத்து மார்க்கட் இல்லாத தன் மருமகனை வைத்து மூன்று திரைப்படங்களை சுஜாதா விஜயகுமார் அதாவது ஜெயம் ரவியின் மாமியார் எடுக்க அதில் இரண்டு படம் தோல்வியை தழுவி ஒரு படம் சுமாரான வெற்றியை தந்தது.
இந்நிலையில் இயக்குனர் பாண்டியராஜன் முன்னிலையில் படத்தின் கதை கேட்கப்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நடக்கக்கூடிய சூழ்நிலையில் ஜெயம் ரவியின் மாமியார் தன் மருமகனிடம் எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்க அதற்கு ரஜினியை போல ஒரு பெரிய தொகையை கேட்டிருக்கிறார்.
இதனை அடுத்து தனது மருமகனுக்கு மார்க்கெட் இல்லை தனது நிலை இவ்வளவு தான் என்பதை எடுத்து கூறிய சமயத்தில் ஏழரை பிடிக்க ஆரம்பித்தது. இதனை அடுத்து ஆர்த்தி தனுஷ் விவகாரம் இருவர் இடையே மனக்கசப்பை ஏற்படுத்த இருந்தாலும் அது சமாதானமாக முடிந்து விட்டது.
மேலும் தன் கணவர் தன்னை பார்த்துக் கொள்ளும் விதத்தைப் பற்றி பெருமையாக பேசிய ஆர்த்தி தற்போது தனது கணவன் கடந்த ஆறு மாதங்களில் நான்கு மாதங்கள் கூட தன்னோடு இல்லை என்ற விஷயத்தையும் சொல்லி இருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு திருமண நாளும் தன்னோடு இருக்கும் கணவர் அந்த நாளை பிரம்மிக்க தக்க கூடிய வகையில் கொண்டாடுவார்கள். ஆனால் இந்த ஆண்டு வந்த திருமண நாளில் அவர் தன்னோடு இல்லாமல் கோவா சென்று விட்டார்.
கோவா சென்ற அவர் அங்கு பின்னணி பாடகியாக இருக்கும் அவளோடு அஜால் குஜாலாக இருந்திருக்கிறார். மேலும் ஆடி காரில் அந்த பாடகியோடு சுற்றிய விஷயம் வெளியே தெரிய ஆர்த்தி மொபைலுக்கு அபராதம் கட்ட வந்த செய்திகளின் மூலம் கோவாவில் இருப்பது உறுதியானதோடு பாடகையோடு சுற்றியதும் தெரிய வந்தது.
சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..
இதனை அடுத்து ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ஜெயம் ரவியின் மேக்கப் மேன், அசிஸ்டன்ட் என அனைவரிடம் அவர் இருக்கும் இடத்தைப் பற்றி விசாரித்து என்ன செய்கிறார் என்பதை பற்றி எல்லாம் கேட்டறிந்திருக்கிறார்.
இதனை அடுத்து இந்த விஷயத்தை ஜெயம் ரவியிடம் அவர்கள் சொல்ல தன் மனைவி தன் மேல் சந்தேகப்படுவதை உறுதி செய்து கொண்ட ஜெயம் ரவி மனைவியோடு இருந்த உறவில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.
இதனை அடுத்து மும்பைக்கு ஜெயம் ரவி சென்று செட்டிலாகி விட யார் போன் செய்தாலும் போன் எடுப்பதில்லை. போன் சுவிட்ச் ஆப் லேயே இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தான் விவாகரத்து அறிவிப்பை வெளியிட அது ஒரு தலை பட்சமாக அவர் எடுத்த முடிவு என ஆர்த்தி பதில் அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.
அத்தோடு ஜெயம் ரவி ஏதாவது ஒரு வகையில் தன் மனைவியின் மீது குற்றங்களை சுமத்தி அதை நிரூபித்தால் மட்டும் தான் விவாகரத்து கிடைக்கும். எனினும் தன் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி முடிவினை மாற்றிக் கொள்வாரா?
அப்படி ஒருவேளை ஜெயம் ரவி விவாகரத்து செய்து விட்டால் அவர் சினிமா வாழ்க்கையை மறந்து விட வேண்டியது தான். அவர் சினிமா உலகில் நிலைத்து நிற்க முடியாது. மேலும் சந்தேகம் இருவர் இடையே உள்ளதால் தான் இத்தகைய பிரிவு நிகழ்ந்துள்ளதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.