உனக்கு லிமிட் அவ்ளோதான்.. மணிமேகலைக்கு ஓப்பன் வார்னிங் கொடுத்த குரேஷி.. சம்பவம் ரெடி..!

கடந்த சில நாட்களாகவே மணிமேகலை மற்றும் வி.ஜே பிரியங்காவிற்கு இடையேயான வாக்குவாதங்கள் என்பது அதிகரித்துக் கொண்டு இருக்கின்றன. சமீபத்தில் குக் வித் கோமாளிலிருந்து விலகினார் மணிமேகலை.

கடந்த ஐந்து வருடங்களாகவே இவர் குக் வித் கோமாளியில் முக்கிய கோமாளியாக இருந்து வந்தார். இந்த வருடம் மட்டும் ஐந்தாவது சீசனை தொகுத்து வழங்கி வந்தார் மணிமேகலை.

லிமிட் அவ்ளோதான்

இந்த நிலையில் இதே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக பங்கு பெற்றிருந்தார் வி.ஜே பிரியங்கா. மணிமேகலையைப் போலவே வி.ஜே பிரியங்காவும் வெகு வருடங்களாகவே தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே சமீபத்தில் பிரச்சனை ஒன்று ஏற்பட்டது. மணிமேகலையை ஒழுங்காக தொகுத்து வழங்க விடாமல் தொடர்ந்து வி.ஜே பிரியங்கா இம்சை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து மணிமேகலைக்கும் வி.ஜே பிரியங்காவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மணிமேகலை இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். மேலும் அவர் வெளியேறியதோடு மட்டுமல்லாமல் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் வெளிப்படையாகவே வி.ஜே பிரியங்காவால்தான் வெளியேறினேன் என்பதை கூறியிருந்தார் மணிமேகலை. இந்த நிலையில் மணிமேகலைக்கு ஆதரவான பதிவுகளும் எதிர்மறையான பதிவுகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. சமீபத்தில் மீண்டும் இந்த பிரச்சனையை கூறும் வகையில் இன்னொரு வீடியோவை மணிமேகலை வெளியிட்டிருந்தார்.

மணிமேகலைக்கு ஓப்பன் வார்னிங்

அதில் தன்னுடன் நெருக்கமாக பழகும் பலரும் வாட்ஸ் அப்பில் ஒரு மாதிரி பேசிவிட்டு வெளியில் வேறு மாதிரி பேசுகிறார்கள் என்று கூறி அதில் குரேஷியையும் நடிகை சகிலாவையும் குறிப்பிட்டு பேசியிருந்தார் மணிமேகலை.

இதனால் கோபமான குரேஷி அவர் பக்கத்தில் இருந்து இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார். அதில் உனக்கு லிமிட் அவ்வளவுதான் என்று கூறுவதாக ஒரு திரைப்பட வீடியோவை வெளியிட்டு இருந்தார் குரேஷி இதனை அடுத்து குரேசிக்கும் மணிமேகலைக்கும் இடையே அடுத்து பிரச்சனைகள் கிளம்பலாம் என்று கூறப்படுகிறது.

சம்பவம் ரெடி

ஆனால் குரேஷியும் மணிமேகலையும் வெகு காலங்களாகவே நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். குரேஷியும் மணிமேகலையை போலவே விஜய் டிவியில் வெகு வருடங்களாக இருந்து வருகிறார். கலக்கப்போவது யாரு சீசன் 5 மூலமாக விஜய் டிவிக்கு அறிமுகமானவர் குரேஷி.

குக் வித் கோமாளியில் ஒரு சில எபிசோடு மட்டும் முதலில் வந்து கொண்டிருந்த குரேஷி பிறகு கோமாளியாக வந்து அதிக வரவேற்பை பெற்றார். தொடர்ந்து இப்பொழுதும் கோமாளியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் மணிமேகலைக்கும் அவருக்கும் இடையே கூட அடுத்து சண்டை வருமா என்று பேச்சுக்கள் வர துவங்கி இருக்கின்றன.

About Jiraya

Check Also

மகள் திருமணத்தில் ஷகிலா செய்த சம்பவம்..! அவசரமாக பிரபலம் செய்த வேலை..! அடக்கொடுமையே.!

கருப்பு வெள்ளை சினிமா காலங்களில் இருந்து சினிமாவில் கிசுகிசுக்கள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கின்றன. சினிமாவில் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் …