ராஜகாளி அம்மன் கோவில் மலேசியா.

 

உலகிலேயே கண்ணாடியால் ஆன முதல் இந்து மதத்தைச் சார்ந்த ராஜகாளியம்மன் கோயில் மலேசியாவிலுள்ள ஜோஹர் பஹ்ரு மாநிலம், ஜலான் தெப்ரு என்ற இடத்தில் உள்ளது.இந்த கோவிலின் அழகை பார்பதற்கு கோடி கண்கள் போதாது. இந்த அளவு கலை நேர்த்தியாக பச்சை சிவப்பு நீலம் மஞ்சள் வெள்ளை என பல நிற கண்ணாடிகள் கொண்டு கட்டமைக்கப்பட்ட கோவில்.

 தாய்லாந்து, ஜப்பான், பெல்ஜியம் நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்ட அழகிய, விலை உயர்ந்த  ஆயிரக்கணக்கான வண்ணக் கண்ணாடி துண்டுகளால் உருவாக்கப்பட்ட இந்தக் கோயிலை பார்ப்பதற்கு மிகவும் பிரம்மிப்பாக இருக்கும். இந்துக்கள் தவிர அனைத்து மதத்தினரும் இந்த கோயிலை ஆச்சரியத்துடன் வந்து தரிசனம் செய்கிறார்கள்.

 இந்த கோயில் ஒரு மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணாடித் துண்டுகளை மியான்மர் நாட்டைச் சேர்ந்த தொழிலாளிகளை கொண்டு கோவிலின் சுவர்கள் மேற்கூரை தூண்கள் என பார்க்கும் இடமெல்லாம் கண்ணாடி பளபளவென்று ஜொலிக்கும்படி பதித்துள்ளனர்.

அத்தோடு ஏழு வண்ணக் கண்ணாடிகளிலிருந்து நாமம், ஸ்ரீ சக்ரா, ஸ்வஸ்திகா ஆகியவற்றை இக்கோவிலில் காணலாம். இங்கு உள்ள விளக்குகளின் ஓளி  பல வண்ண கண்ணாடிகளில் பட்டு பிரதிபலிக்கும் ஆழகை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

ராஜ  காளியம்மனுக்கு அடுத்தபடியாக இந்த கோயிலில் சிவன், விஷ்ணு, பெரியாச்சி அம்மனுக்கு என தனித்தனியாக சன்னதிகள் உள்ளது. மேலும் விநாயகர், முருகன்  சிலைகளும்  இங்கு உள்ளது. இத்தோடு சாய்பாபா ராமகிருஷ்ணர் விவேகானந்தர் போன்ற மகான்களின் திருவுருவச் சிலையும் இக்கோயிலில் காணலாம். இந்த கோயிலானது மலேசியன் புக்ஸ் ஆப் ரெக்கார்டிங்  2010 மே மாதம் 12 ம் நாள் பதிவு செய்யப்பட்டுள்ளது.வாழ்க்கை யில் ஓரு முறையாவது இந்த கோவிலை ஓவ்வொரு தமிழர்களும் பார்க்க வேண்டும்.

எல்லா வித பூசை களும் சீறும் சிறப்பாக அம்மனுக்கு தினமும் நடைபெறுகிறது.பக்தர்களும் அம்மனை தேசமெல்லாம் பேசுகின்ற ராஜகாளி அம்மனுக்கு பூச வைப்போம் பொங்க வைப்போம் பூ முடித்த அம்பிகைக்கு என்ற பாடலைப் பாடிய வண்ணமே ராஜகாளி அம்மனை தரிசித்து அனைத்து வளங்களையும் பெற்று மன மகிழ்ச்சி அடைகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …