“மத்திய அரசின் பெயரை இப்படி மாற்றுங்க..” – இயக்குனர் பேரரசு பரபரப்பு கோரிக்கை…!

சமீபகாலமாக சில அரசியல் கட்சியினர் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைக்கும் போக்கை கடைபிடித்து வருகின்றனர். காரணம், இந்தியா என்பது ஒரு நாடு அல்ல அது பல நாடுகளின் கூட்டமைப்பு என்பது போல அப்பட்டமான ஒரு பிரிவினைவாதத்தை பேசி வருகின்றனர்.

எதற்காக இப்படி பேசுகின்றனர் என்று கேட்டால் இந்திய அரசியலமைப்பு இதைத்தான் கூறுகிறது என்று மேற்கோள் காட்டுகிறார்கள்.

ஒன்றியம் என்றால் என்ன..?

ஒன்றியம் என்றால் சிறு சிறு பகுதிகளாக இருக்கும் பல நாடுகள் ஒன்றாக இணைந்து தங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் அல்லது உடன்படிக்கையை செய்து கொண்டு பொதுவான ஒரு நாடாக பொதுவான ஒரு அரசை ஏற்று இருப்பது தான்.

ஆனால், இந்தியா அப்படி கிடையாது. இந்தியா என்பது ஒரே நாடு. நிர்வாக வசதிக்காக மட்டுமே மொழிவாரியாக சிறு சிறு பகுதிகளாக பிரித்து அப்படி பிரிக்கப்பட்ட பகுதிகள் மாநிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஆனால், இங்கு இருக்கும் சில அரசியல்வாதிகள் அப்படி பிரிக்கப்பட்ட மாநிலங்களை தனியான நாடு என சில விஷம கருத்துக்களை அரசியல் செய்கிறோம் என்ற ஒரே காரணத்திற்காக இப்படி பேசிக் கொண்டிருப்பது மேலும் சிலர் இதனை நம்புவதும், அப்படியே பின்பற்றுவதும் ஒரு ஆபத்தான நிலையை நோக்கி இந்தியா அழைத்து செல்லப்படுகிறது என்பதை காட்டுகிறது.

Voice of Unity பாடலின் உண்மை..

சமீபத்தில், மாநாடு என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற வாய்ஸ் ஆப் யூனிட்டி என்ற பாடல் வரிகளை கவனித்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும். அது என்னவென்றால் பாடலின் தலைப்பிற்கும் அந்த பாடலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான்.

வாய்ஸ் ஆப் யூனிட்டி என்று ஒற்றுமையின் குரல் என்ற அர்த்தத்துடன் அந்த பாடலுக்கு தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பாடலின் முதல் வரி அப்பட்டமான பிரிவினை பேசும் வரிகளாக இடம்பெற்றிருக்கின்றன.

அதன் படி, “ஒரு நாடு இது என்றாலும்.. பல நாடுகளின் கூடு…” என்று சொல்வதன் மூலம் எப்படி ஒற்றுமையை விளக்குகிறார் பாடலின் ஆசிரியர் என்பதை அவர் தான் கூற வேண்டும். இதே வரிகளை “பல நாடுகளின் கூடு என்றாலும் இது ஒரே நாடு..” என்று பாடியிருந்தால் “ஒற்றுமை குரல்” என்று இந்த பாடலுக்கு தலைப்பு வைத்தது பொருத்தமாக இருந்திருக்கும்.

ஆனால் வெறுமனே ஒற்றுமையின் குரல் என்று தலைப்பு வைத்து விட்டு இது ஒரு நாடு என்றாலும் பல நாடுகளின் கூடு என்று அப்பட்டமான பிரிவினைவாதத்தை பேசும் வரிகளை இணைத்துள்ளார்.

பேரரசு கண்டனம்..

நாட்டில் அன்றாடம் நிகழும் சர்ச்சைகள் ஒரு பக்கம் இருக்க இப்படியான பேச்சுக்களும் தொடர்ந்து தான் வருகின்றன. இந்நிலையில், பிரபல சினிமா இயக்குனர் பேரரசு இது குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியதாவது மத்திய அரசை இந்திய அரசு என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் ஒன்றியம் என்பது தற்பொழுது அரசியல் கட்சியை வளர்க்க உதவும் ஒரு வார்த்தையாக மாறி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். எனவே மத்திய அரசை இனிமேல் இந்திய அரசு என மாற்ற வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார் இவருடைய இந்த கோரிக்கைக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன அதே சமயம் மாற்றுக்கருத்துகளும் எழுந்துள்ளன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …