சுருண்டு விழுந்த கார்த்தி.. பவன் கல்யாணிடம் ஓப்பனாக மன்னிப்பு கேட்டதின் பின்னணி..!

தமிழ் திரை உலகில் வாரிசு நடிகர்களில் ஒருவராக திகழும் பிரபல நடிகரின் சகோதரர் கார்த்தி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகர் சூர்யாவின் தம்பி மற்றும் நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனான இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில் அண்மையில் திருப்பதி லட்டு விவகாரம் பலர் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்களை பெற்று பேசும் பொருளாகி வரக்கூடிய சூழ்நிலையில் நடிகர் சூர்யா மெய்யழகன் தெலுங்கு பிரமோஷனல் பேசிய பேச்சு, பவன் கல்யாண் சனாதன தர்மத்தை பற்றி கூறியதோடு லட்டு விவகாரத்தைப் பற்றி சினிமாவில் பேசுவது சிறப்பல்ல என்று கூறியது பெரும் கவனத்தை ஈர்த்தது.

சுருண்டு விழுந்த கார்த்தி..

இந்த நிலையில் தெலுங்கு பட பிரமோஷன் நிகழ்வில் தொகுப்பாளினி கேட்ட கேள்விக்கு லட்டு பற்றி தற்போது பேசக்கூடாது ஏனென்றால் இது மிகவும் சென்சிடிவ் ஆன விஷயமாக உள்ளது என்று கூறி இருக்கிறார்.

மேலும் அந்தத் தொகுப்பாளினி அப்படி என்றால் உங்களுக்கு மோதிச்சு லட்டு கொடுக்கலாமா என்று கேட்டதற்கு லட்டே வேண்டாம் என்று சிரித்தபடி பதில் அளித்ததை அடுத்து இவர் கூறிய பேச்சு திருப்பதி லட்டு விவகாரத்தோடு தொடர்பு படுத்தி பல்வேறு வகையான விமர்சனங்கள் இருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே ஹிந்துக்கள் பலர் மனதில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கும் திருப்பதி லட்டு விவகாரம் பற்றி தான் பூடகமாக நடிகர் கார்த்தி பேசியிருக்கிறார் என்பது போன்ற ரீதியில் விஷயங்கள் வேகமாக வைரலாக பரவியது.

இதனை அடுத்து பல்வேறு விமர்சனங்கள் இணையத்தில் வேகமாக பரவியதை அடுத்து நடிகர் கார்த்தி திடீர் என தன் பேச்சிலிருந்து ஜகா வாங்கி பவன் கல்யாண் இடம் சுருண்டு விழுந்து மன்னிப்பு கேட்டு இருக்கிறார்.

பவன் கல்யாணிடம் ஓப்பனாக மன்னிப்பு கேட்டதின் பின்னணி..

அப்படி பவன் கல்யாணிடம் கார்த்தி மன்னிப்பு கேட்க காரணம் என்ன என்பது பற்றிய ஓப்பனான பின்னணி தற்போது தெரியவந்துள்ளது. இதற்குக் காரணம் என்னவென்பது பற்றி இனி பார்க்கலாம்.

நடிகர் கார்த்திக் தமிழ் திரை உலகில் ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் இருப்பது போல தெலுங்கு திரை படத்திலும் ஒரு மிகப்பெரிய ரசிகர் படை இருப்பதோடு இல்லாமல் தெலுங்கிலும் அவருக்கு என்று ஒரு நல்ல மார்க்கெட் உள்ளது.

லட்டு விவகாரத்தால் தான் தேசிய பேச்சின் மூலம் தன்னுடைய மார்கெட்டுக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்று நடிகர் கார்த்தி பயந்து போய் இருக்கிறார். மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அதிகளவு ரசிகர்களை கொண்டு இருக்கக்கூடிய இவர் அந்த மாநில மக்களின் சென்டிமென்டை தொடக்கூடிய அளவு பேசிய பேச்சால் அவரது மார்க்கெட் சரிய காரணமாகும்.

மேலும் தெலுங்கு படங்களில் இவர் நடித்திருக்க கூடிய பட்சத்தில் அவற்றின் வியாபாரம் குறைந்து வசூல் ரீதியில் ஒரு மிகப்பெரிய அடியை சந்திக்க நேரிடும் என பயந்து போன கார்த்தி உடனடியாக பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

ஏற்கனவே விழா ஒன்றில் தனக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்கள் தான் அதிக அளவு பிடிக்கும் என்று பேசி இருக்கக்கூடிய நடிகர் கார்த்தி தற்போது தெலுங்கு பட மார்க்கெட்டை தக்க வைக்க தான் இதுபோல செய்திருக்கிறார் என்று சில பின்னணி தகவல்கள் வெளி வந்துள்ளது.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையம் எங்கும் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் கார்த்திக் செயலுக்கு சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் தங்களது கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam