Dark circles under the eyes Removal : மாறிவிட்ட வாழ்வியல் சூழல், உணவு முறை, உள்ளிட்ட காரணங்களினால் பெரும்பாலானோர் கருவளைய பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.
இதனை தீர்ப்பதற்கு பல்வேறு உபாயங்கள் கிடைக்கின்றன. ஆனால் எதை பயன்படுத்தினால் சரியான எந்தவித பக்க விளைவும் இல்லாத ரிசல்ட் கிடைக்கும் என்பதில் பலருக்கு சந்தேகங்கள் இருக்கிறது. அந்த சந்தேகத்தை போக்குவதற்கு தான் இந்த பதிவு.
கருவளையத்தை நீக்க வேண்டும் என்று தேடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு சரியான வழிகாட்டுதலை கொடுக்கும்.
தற்போது, இருக்கும் வாழ்க்கை முறை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த வாழ்க்கை முறையை காட்டிலும் மாறுபட்டதாக இருக்கிறது. பல்வேறு புதிய உணவுகளை மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.
பல்வேறு புதிய வேலைகளை செய்கிறார்கள். குறிப்பாக அதிக நேரம் கைபேசி பயன்படுத்துகிறார்கள். இப்படி மாற்றம் முன்னேற்றம் என்ற பெயரில் பல்வேறு விஷயங்களை நோக்கி மனித சமுதாயம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அதே சமயம் தங்களின் உடல் ஆரோக்கியத்தின் மீது செலுத்தும் அக்கறையும் மக்களிடையே கணிசமாக அதிகரித்து இருக்கிறது. மாறிவிட்ட வாழ்க்கை முறைகள் காரணமாக பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
இதனை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக் கொள்வதிலும் இன்றைய தலைமுறை ஆர்வமாக இருக்கிறது. சமீப காலமாக, சிறு வயதிலேயே வயதான அறிகுறிகள் தோன்றுகிறது. முறையான தூக்கம் இன்மை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்கள் கருவளையத்திற்கு காரணமாக அமைகிறது.
கருவளையம் மறைய
நீங்கள் எந்த அளவுக்கு முயற்சி செய்தும் கருவளையத்தை நீக்க முடியவில்லை என்றால் இந்த எளிமையான ரகசியத்தை பின்பற்றி கருவளையத்தை நீக்கலாம்.
வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே இந்த கலவையை நீங்கள் செய்யலாம். இது, கருவளையத்தை மறைய செய்வதுடன் மட்டுமில்லாமல் முகத்தில் இருக்கும் கருமையை நீக்கி முகம் பொலிவு பெறவும் உதவும்.
இதற்கு தேவையான பொருட்கள் இரண்டே இரண்டு தான். ஒன்று தேன் மற்றொன்று காபி பவுடர்.
தேன் ஒரு பங்கு.. காபி பவுடர் அரை பங்கு.. உதாரணத்திற்கு தேன் 10 கிராம் எடுக்கிறீர்கள் என்றால் காபி பவுடரை 5 கிராம் அளவுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை எப்படி செய்வது என்று பார்க்கலாம். முதலில் ஒரு சிறிய கன்னத்தில் தேனை ஊற்றி அதன் பிறகு காபி பவுடர் சேர்த்து இரண்டும் நன்றாக சேரும் அளவுக்கு குறைந்தபட்சம் ஒரு ஐந்து நிமிடங்கள் நன்றாக கலக்கவும்.
பின்னர் இந்த கலவையை 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவி விட்டு அதன் பின்னர் கருவளையம் உள்ள பகுதிகளில் தடவி ஐந்து நிமிடம் அளவுக்கு விரல்களை வைத்து மிருதுவான முறையில் நன்றாக மசாஜ் செய்து விடவும்.
பின்னர் 30 நிமிடங்கள் அதை அப்படியே விட்டு விடவும் கண்களை மூடி அமைதியாக படுத்து விடுவது நல்லது. அந்த நேரத்தில் கைப்பேசிகளை பயன்படுத்த வேண்டாம்.
இதனை தொடர்ந்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். இந்த முறையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற முறையில் இரண்டு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கண் கருவளையம் மறைந்து முகம் பொலிவு பெற்றிருப்பதை உங்களால் பார்க்க முடியும்.
கண் கருவளையம் மறைய வேண்டும் என்றால் வெளிப்புறத்தில் இருந்து நாம் கொடுக்கக்கூடிய தீர்வுகள் ஒரு பக்கம் இருந்தாலும் நம் உடலுக்குள் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவுகள் மூலம் உணவுகளும் இதற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
தினமும் குறைந்தபட்சம் ஆறு மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை நன்றாக உறங்குங்கள் இதனால் கருவளையம் வருவதையும் ஏற்கனவே இருக்கும் கருவளையம் பெரிதாவதையும் தடுக்கலாம்
அன்றாட உணவில் ஃபைபர்(நார்ச்சத்து) அளவு சரியான அளவில் இருக்கிறதா..? என்பதை உறுதி செய்யுங்கள். ஏனென்றால் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்களுடைய சருமத்தை பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கு உதவி செய்கின்றன.
வாரம் ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒரு முறையாவது முகத்திற்கு மசாஜ் செய்து விடுங்கள். முகத்தை மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தை இறுக்கமாக்கி ரத்த ஓட்டத்தை அதிகரித்து கருவளையம் வருவதை தடுக்கலாம் மிகவும் பொலிவு பெறும்/
அதே சமயம் ஹைட்ரேசன் (Hydration) என்பதும் இங்கே முக்கியம். உங்கள் உடல் எடைக்கு ஏற்ப சரியான அளவில் குடிநீர் பருகுவதை வழக்கமாக்குங்கள். உதாரணத்திற்கு உங்களுடைய உடல் எடை 60 கிலோ இருக்கிறது என்றால் 20 கிலோவுக்கு 1 லிட்டர் என்ற வகையில் ஒரு நாளைக்கு நீங்கள் 3 லிட்டர் தண்ணீரை ஒரு நாளில் பருகுவது கட்டாயம்.
இங்கே தண்ணீர் என்பது வெறும் தண்ணீர் மட்டும்தான். டீ, காபி போன்ற விஷயங்களை இதற்குள் அடக்க கூடாது. வெறும் தண்ணீரை உங்கள் உடல் எடைக்கு ஏற்றார் போல பருக வேண்டும்.
சாதாரணமாக 18 வயது நிரம்பிய அனைவருமே குறைந்தபட்சம் 3.5 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும் என்று பரிந்துரைக்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்த வழிமுறைகளை பின்பற்றி அழகான சரும ஆரோக்கியத்தை உங்களால் பெற முடியும்.
தொடர்ந்து உடல் நலம் சார்ந்த பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.