பெற்ற தாயை பார்த்து ரம்யா கிருஷ்ணன் மகன் கூறியதை கேட்டீங்களா..? அதை காட்டி மிரட்டுவாங்க..!

தமிழில் தற்சமயம் நயன்தாரா திரிஷா மாதிரியான நடிகைகள் எல்லாம் 30 வயதை தாண்டிய பிறகும் கூட இன்னமும் கதாநாயகியாக நடித்து வந்து கொண்டிருக்கிறார்கள்.

பலரும் இதை பாராட்டி வருகின்றனர் பெரிய விஷயமாக பேசி வருகின்றனர் ஆனால் இவர்களுக்கு முன்பிருந்தே தமிழ் சினிமாவில் இப்பொழுதும் மார்க்கெட் குறையாமல் இருந்து வரும் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். நடிகை ரம்யா கிருஷ்ணன் இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.

பெற்ற தாயை பார்த்து

கேப்டன் பிரபாகரன் மாதிரியான திரைப்படங்களில் பார்த்தால் அடையாளமே தெரியாத ஒரு நபராக இருப்பார். அந்த அளவிற்கு இளமையாக இருந்த ரம்யா கிருஷ்ணன் இப்பொழுது வரை சினிமாவில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இன்னமும் ரம்யா கிருஷ்ணன் இளமை மாறாமல் இருக்கிறார் என்பதுதான். படையப்பா மாதிரியான திரைப்படங்களில் நடித்த பொழுது ரம்யா கிருஷ்ணனின் மார்க்கெட் என்பது வேற அளவில் உயர்ந்தது.

ரம்யா கிருஷ்ணன் மகன்

படையப்பா திரைப்படத்திற்கு பிறகு அவரை பலரும் நீலாம்பரி என்று அழைக்க துவங்கினார்கள். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் பிரபலமடைந்த்து. அதற்கு பிறகு அவரது நடிப்பில் மீண்டும் ஒரு பெரிய வரவேற்பு பெற்ற கதாபாத்திரம் என்றால் அது பாகுபலி திரைப்படத்தில் வரும் சிவகாமி கதாபாத்திரம்தான்.

இப்படியாக எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கும் நடிகையாக ரம்யா கிருஷ்ணன் இருந்து வருவதால் அனைத்து மொழிகளிலும் அவருக்கு வாய்ப்புகள் என்பது கிடைத்து வருகிறது.

அதை காட்டி மிரட்டுவாங்க

இந்த நிலையில் சமீபத்தில் அவரும் அவரது மகனுடன் சேர்ந்து ஒரு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்தார் ரம்யா கிருஷ்ணன். அது அதிக வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் ரம்யா கிருஷ்ணனின் மகனிடம் உங்களுக்கு உங்கள் அம்மாவிடம் பிடித்த விஷயம் என்ன?

பிடிக்காத விஷயம் என்ன என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த ரம்யா கிருஷ்ணனின் மகன் எப்போதும் நான் அம்மாவை பார்ப்பதற்கு அவர் அறைக்கு சென்றாலும் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார். அந்த அளவிற்கு என் மேல் பாசம் கொண்டவர் எனது அம்மா.

அந்த விஷயம் ரொம்ப பிடிக்கும் ஆனால் அதே அளவிற்கு மிகவும் கோபமானவர் அவர். நான் ஏதாவது தவறு செய்து விட்டேன் என்றால் பாகுபலி திரைப்படத்தில் வரும் சிவகாமி தேவியாக மாறிவிடுவார் என்னை. பார்த்து இரண்டு பெரிய கண்களையும் உருட்டி முறைப்பார்.

அதிகபட்சமாக நான் அதிகமாக மதிப்பெண் பெறவில்லை என்றால் அந்த மாதிரி செய்வார். நான் சிறுவயதாக இருக்கும் பொழுது அம்மா வெளியில் படப்பிடிப்புக்கு செல்கிறார் என்றாலே எனக்கு மிகவும் கவலையாக இருக்கும் அம்மாவை மிகவும் மிஸ் செய்வேன். ஆனால் இப்பொழுதெல்லாம் அம்மா படப்பிடிப்புக்கு சென்றால் தான் வீடு அமைதியாக இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறி இருந்தார் ரம்யா கிருஷ்ணனின் மகன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam