ச்சே பாக்கவே அசிங்கமா இருக்கு.. இந்த மாதிரி பண்ணாதீங்க.. அந்த வீடியோதான் காரணம்.. அதிதி ஷங்கரை கழுவி ஊற்றும் ரசிகர்கள்.!

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக பிரபலமாக இருந்து வரும் வாரிசு நடிகைகளில் முக்கியமானவராக அதிதி சங்கர் மாறி வருகிறார். பெரும்பாலும் நடிகைகளுக்கான வாய்ப்புகள் என்பது தமிழ் சினிமாவில் ஒரு போராட்டமாக தான் இருந்து வருகிறது.

மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கும் சீரியலில் நடிப்பவர்களுக்கும் எளிதாக தமிழ் சினிமாவில் நடிகை ஆவதற்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. இது இல்லாமல் தன்னுடைய தந்தை சினிமாவில் பிரபலம் என்பதை மட்டுமே பயன்படுத்தி சினிமாவிற்கு அறிமுகமாகவும் நடிகர் நடிகைகள் உண்டு.

பாக்கவே அசிங்கமா இருக்கு

அப்படி ஒருவராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் நடிகை அதிதி ஷங்கர். முதல் திரைப்பட வாய்ப்பே பெரிய படமாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முத்தையா இயக்கத்தில் வெளியான விருமன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் அதிதி ஷங்கர்.

அவருக்கு பாடல்கள் பாடுவதிலும் அதிகம் ஆர்வம் இருந்ததால் அந்த திரைப்படத்தில் ஒரு பாடலும் பாடி இருந்தார். அந்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது. அதன் மூலம் அதிதி ஷங்கருக்கும். அதிக வரவேற்புகள் கிடைத்தது.

இந்த மாதிரி பண்ணாதீங்க

முக்கியமாக அந்த திரைப்படத்தில் அதிதி ஷங்கரின் கதாபாத்திரம் முக்கியமான ஒரு கதாபாத்திரமாக இருந்தது. இதனை தொடர்ந்து வாய்ப்புகளை பெறத் துவங்கிய அதிதி ஷங்கர் அடுத்து சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த மாவீரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

மாவீரன் திரைப்படமும் இவருக்கு நல்ல வெற்றியை கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்சமயம் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் ஆர்வம் கட்ட துவங்கியிருக்கிறார் அதிதி ஷங்கர்.

அந்த வீடியோதான் காரணம்

அதே சமயம் அதிரஷங்கரின் நடிப்பு குறித்து தொடர்ந்து கருத்து வேறுபாடு என்பது மக்கள் மத்தியில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அதிதி ஷங்கர்.

நேசிப்பாயா என்கிற இந்த திரைப்படத்தில் முரளியின் மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது அந்த டீசரில் அதிதி ஷங்கரின் நடிப்பு அவ்வளவு நன்றாக இல்லை என்று பேச்சுக்கள் வர துவங்கி இருக்கின்றன.

அதற்கு தகுந்தார் போல அந்த டீசரிலேயே அதிதி சங்கர் கொடுக்கும் சில முக பாவனைகள் அவ்வளவு நன்றாக இல்லை பார்க்கவே அசிங்கமாக இருக்கிறது. எனவே அதிக ஷங்கர் அவர் கொடுக்கும் ரியாக்ஷன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் பேச துவங்கியிருக்கின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam