தென்னிந்திய சினிமாவில் அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பரிட்சயமான ஒரு முகமாக ரம்யா கிருஷ்ணன் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் முக்கியமான அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்துள்ளார் 80s, 90s என கிட்டத்தட்ட 20 ஆண்டுகளை ஹீரோயினாகவே நடித்து வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
குடும்பப்பாங்கான வேடமாக இருந்தாலும், சரி கவர்ச்சி குதிரையாக துள்ளி குதிக்கும் கிளாமர் வேடமாக இருந்தாலும் சரி, இரண்டிலும் தன்னுடைய அசாத்தியமான நடிப்பால் கனகச்சிதமாக செய்யக்கூடியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
சமீபத்தில் வெளியான பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக உயர்ந்தார் ரம்யாகிருஷ்ணன்.
தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வரும் இவர் பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். மேலும் முக்கியமான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
கிட்டத்தட்ட ஐம்பது வயதாகும் 25 வயது நடிகை போல கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களை பதர விடுகிறார். அந்த வகையில், கொசு வலை போன்ற லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையை காட்டியபடி இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தாறுமாறாக வைரலாகி வருகின்ற இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், உண்மையை சொல்லுங்க உங்களுக்கு 25 வயசு தானே என்று வர்ணித்து வருகின்றனர்.